தவிசாளர் ஜெயசிறிலிடம் மீன்பிடிப்படகு உரிமையாளர் நன்றியுடன்தெரிவிப்பு!
காரைதீவு நிருபர் சகா -காரைதீவிலிருந்து ஆழ்கடலுக்குச்சென்று காணாமல்போன சாய்ந்தமருது மற்றும் காரைதீவைச்சேர்ந்த மூன்று மீனவர்களின் இயந்திரப்படகு யாழ்ப்பாணத்திற்கு அப்பாலுள்ள சர்வதேசகடற்பரப்பில் 21 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களை ஆழ்டகடலில் இருந்து யாழ்.கரைக்கு அழைத்துவரும் பணியில்கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடிப்படகு உரிமையாளர் நேற்றுமாலை(7) இச்செய்தியை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலிடம் நன்றியுடன் தெரிவித்தார்.
உடனடியாக தவிசாளர் ஜெயசிறில் கடற்படையினருடன் தொடர்புகொண்டு அவர்களை கரைக்குக்கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தற்சமயம் 0222 என்ற இலக்கமுடைய அப்படகு கடற்படையினரால் கட்டி இழுத்தவரப்படுகிறது. இன்றுமாலை அல்லது நாளை கரையை வந்தடையலாம் எனவும் பின்னர் அவர்கள் குடும்பத்துடன் சேரலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
21நாட்களின்பின்னர் இம்மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப்பெற்றதையடுத்து அக்குடும்பங்களும் உறவுகளும் நிம்திப்பெருமூச்சு விட்டவண்ணம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளன.
அவர்களின்வருகையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி காரைதீவு மாளிகைக்காட்டுத்துறையிலிருந்து ஆழ்கடலுக் இயந்திரப்படகில் சென்ற சாய்ந்தமருதைச்சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன்(வயது36) இஸ்மாலெவ்வை ஹரீஸ்(வயது37) காரைதீவைச்சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது47) ஆகிய மூவரே இவ்விதம் கடலில் மாயமானவர்களாவர்.
கடந்த பலநாட்களாக பலகோணங்களிலும் தேடுதல் வேட்டைகள் நடைபெற்றுவந்தன. ஆனாலும் அவை பலனளிக்கவில்லை.
தரைப்படை விமானப்படை கடற்படை உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டன. அரசியல்வாதிகள் சிலரின் உதவியும் கிடைத்தது. எனினும் சாதகமான செய்திகள் எதுவும் இதுவரை கிட்டவில்லையென்று குறித்த குடும்பங்கள் கவலைதெரிவித்துளன. அவர்கள இருபது நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை. அவர்கள் என்னவானார்கள் என்றுகூடத்தெரிவில்லை. இந்நிலையில் இவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகி கவலையுடன் வீதிக்கு வந்திருந்தன.
இந்தநிலையில் சர்வதேசகடற்பரப்பில் செயலிழந்து 0222 என்ற இலக்கமுடைய இயந்திரப்படகு ஒன்று மீனவர்களுடன் தத்தளிப்பதாக தென்பகுதி மீனவர்கள் சிலர் மாத்தறை கடற்படைதலைமையகத்திற்கு தகவல்கொடுத்ததன்பேரில் கடற்படை முயற்சியில் இறங்கியுள்ளது.