அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (8) நவராத்திரி விழாவின் இறுதிநாளாகிய விஜய தசமி பூசைகள் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா தலைமையில் இடம்பெற்றது.
பஜனை பாடல்களுடன் ஆரம்பமான வாணிவிழா பூஜைகள் சிவசிறி தி. தேவகுமார் ஆச்சாரியாரினால் இந்துசமய மரபுகளுடன் நடார்த்தி வைக்கப்பட்டது .
இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அறநெறி பாடசாலை மாணவர்களின் நவராத்திரி பூஜை விளக்குமுகமாக கவிதை,நடனம்,பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது . இதனை தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வாணி விழா நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இஅறநெறி பாடசாலை மாணவர்கள் இஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
இதே வேளை கல்முனை பிரதான தபால் காரியாலயம் மற்றும் தமிழ் உப பிரதேச செயலகத்திலும் வாணி விழா நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.