ஏறாவூர் நகரசபையின் 2020ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்திற்கு ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

எஸ்.அஷ்ரப்கான்-
றாவூர் நகர சபையின் 2020 ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று 29.10.2019 திகதி காலை ஏறாவூர் நகரசபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்ற விஷேட சபை அமர்வின் போது நகர முதல்வர் ஐ.அப்துல் வாசித் அவர்களினால் சபையில் சமர்பிக்கப்பட்டது.
இவ்வரவு சிலவுத்திட்டமானது, கடந்த 2018 ம் ஆண்டு இடம் பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியினை மையப்படுத்தி ஆட்சியமைத்த ஏறாவூர் நகரசபையின் இரண்டாவது வரவு செலவுத்திட்டமும் கடந்த வருட வரவு செலவுத்திட்டம் போன்று ஏகமனதாக சபையில் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இவ் வரவு செலவுத்திட்டமானது
ஏறாவூர் நகரசபையின் வருமானத்தினை அதிகரித்து, மீண்டு வரும் செலவினங்களை குறைத்து, மூலதனச் செலவினத்தை அதிகரித்து மக்களின் அபிவிருத்திப் பணிகளுக்கு கூடுதலான முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக நகர முதல்வர் தெரிவித்தார்.

மேலும் இவ்வரவு சிலவுத்திட்டத்தில் மொத்த வருமானமாக ரூபா 178, 232, 300 (நூற்று எழுபத்தெட்டு மில்லியன் இரண்டு இலட்சத்து முப்பத்திரண்டாயிரத்து முந்நூறு) ரூபாய்களும்.
மொத்த செலவீனமாக 178,230,200 (நூற்று எழுபத்தெட்டு மில்லியன் இரண்டு இலட்சத்து முப்பதாயிரத்து இருநூறு) ரூபாய்களும்
எதிர்பார்க்கப்படுவதாக தவிசாளர் குறிப்பிட்டார்.

தவிசாளர் அவர்களின் வாசிப்பினை தொடர்ந்து சபையில் சமூகமளித்திருந்த கௌரவ உறுப்பினர்களினால் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று 2020 ம் ஆண்டிற்கான குறித்த வரவுசெலவுத் திட்டம் அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமானதாக ஆங்கீகரிக்கப்பட்டது.
ஏகமானதாக அங்கீகரிகப்பட்டதை தொடர்ந்து தவிசாளர், உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்ததோடு வரவு செலவு திட்டத்தினை தயாரிப்பதற்கு பங்காற்றிய
சபையின் செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட உத்தியோகத்தர் குழாமினர் அனைவருக்கும் தனது உளப்பூர்வமான நன்றிகளையும் பராட்டுக்களையும் தெரிவித்தார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -