அகில இலங்கை ரீதியான தேசிய மட்ட தமிழ்த்தின விவாத போட்டியில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை அணியினர் வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.
25 வருடங்களின் பின்னர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாகாண மட்டத்தில் வெற்றியீட்டி தேசிய மட்டத்தற்கு தெரிவாகியது.
கொழும்பு, கல்வி அமைச்சில் (08) இடம்பெற்ற தேசிய மட்ட போட்டிகளில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை அணியினர் கலந்துகொண்டு வெற்றியீட்டி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டனர்.
போட்டியில் பங்குபற்றிய மாணவர்களான ஏ.எல். முஸ்பிர் அகமட், எம்.ஏ.ஆகாஷ் அகமட், எம்.என். ஹஸ்ஸான் அக்தர், பயிற்றுவித்த ஆசிரியரான வை.எம். அஷ்ரப் ஆகியோருக்கு பாடசாலை அதிபர் அ.அப்துல் கபூர் மற்றும் பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் அனைவரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் வரலாற்றில் தேசிய மட்ட விவாதப்போட்டியில் பெற்றுக்கொண்ட முதல் வெற்றிப்பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.