சிரேஷ்ட விரிவுரையாளர் மொஹமட் இர்ஷாட் கலாநிதி பட்டம் பெற்றார்.




எஸ்.அஷ்ரப்கான்-
லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழிநுட்ப பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் (தரம் I ) அத்துறையின் துறைத் தலைவருமான முஹைதீன் பாவா மொஹமட் இர்ஷாட் கடந்த 03.08.2019 ல் மலேசியா நாட்டின் Management and Science University (MSU) ல் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் (Information and Communication Technology) கலாநிதி (Doctor of Philosophy) பட்டத்தை பெற்றுள்ளார்.

இவர் தகவல் தொழில்நுட்ப துறையில் புதியஎண்ணக்கருவான Cloud Computing Adoption எனும் தலைப்பில் தனது ஆய்வை சமர்பித்திருந்தார்.1998 ல் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இணைந்து Bachelor of Business Administration ஆங்கில மொழிமூலமான முதலாம் வகுப்பு சிறப்பு பட்டம் பெற்றார். 09.02.2004 ல் தற்காலிக உதவி விரிவுரையாளராக வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் நியமிக்கப்பட்டார். ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்ட பின்படிப்பு முகாமை நிறுவனத்தினால் நடத்தப்பட்ட தேர்வுப் பரீட்சையில் சித்தி பெற்று குறித்த பல்கலைக்கழகத்தில் Master of Business Administration (MBA) பட்டத்தை 2008 ல் பூர்த்திசெய்தார்.
மேலும், தென் கிழக்கு பல்கலைக்கழகதில் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான செயற்திட்ட முன்மொழிவை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்து அனுமதி பெறப்பட்டதன் மூலம் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டதுடன் அதனது தலைவராகவும் 2015 ல் நியமிக்கப்பட்டார்.
Fellowship, கருதத்தரங்குகள், மற்றும் கணினி பாதுகாப்பு சம்பந்தமான பயிற்சிகளுக்காக இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கும் சென்றவரென்பது குறிப்பிடடத்தக்கது. அத்துடன் Asi@Connect திட்டத்தின் Network Development செயற்திட்ட முன்மொழிவுகளின் மதிப்பீட்டாளராகவும் செயற்பட்டு வருகிறார்.
கலாநிதி எம் . பி . எம் . இர்ஷாட் தனது ஆரம்பக்கல்வியை தி / புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் தனது உயர்கல்வியை கம்பளை சாஹிராவிலும் கற்றுள்ளதுடன், ஓய்வு பெற்ற அதிபர் எஸ் . எல் . முஹைதீன் பாவா மற்றும் கதீஜா பீவின் மகனுமான இவர் கல்முனை 06, ஹனிபா வீதியில் வசித்து வருகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -