அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு "சமூக ஊடகங்களும் - ஒழுக்க நெறியும்" எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயலமர்வு

எம்.என்.எம்.அப்ராஸ்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் விகல்ப இணையதளம் ஆகியன இணைந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு செயலமர்வு.  (28) நிந்தவூரில் உள்ள தோப்புக்கண்டம் விடுதியில் இடம்பெற்றது.
"சமூக ஊடகங்களும் - ஒழுக்க நெறியும்" எனும் தொனிப்பொருளில் இச் செய்லமர்வு இடம்பெற்றது.
விகல்ப இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் சம்பத் சமரக்கோன்,
ட்ரான்ஸ்பேரன்சி இன்ரநெசனல் நிறுவனத்தின் தகவல்தொழில்நூட்ப முகாமையாளர் ஹரித்த தஹாநாயக்க ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு சமூக ஊடங்ககளை சிறந்த முறையில் பொறுப்புடன் எவ்வாறு கையாள்வது பற்றியும் அதன் நன்மை, தீமைகள் ஆகிய விடயங்களை எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான், தேசிய அமைப்பாளர் எம்.எப்.றிபாஸ் மற்றும் விகல்ப இணையத்தளத்தின் இணை ஆசிரியர் இஷாரா தனசேகர , ஆகியோர் இந் நெறியை நெறிப்படுத்தினர். இந்த ஒரு நாள் செய்லமர்வில் அம்பரை மாவட்டத்தில் உள்ள அச்சு ,இலத்திரனியல் ,இணைய ஊடகவியலாளர் கலந்துகொண்டர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -