அரசியல், நிர்வாகம், அறிவு ரீதியானவர்கள் பெரிதொரு வளம் : மருதமுனைக்கு இஸ்மாயில் எம்.பி. புகழாரம் !!

நூருல் ஹுதா உமர்-
“கடந்த முப்பது வருட யுத்தத்தினால் நசுங்குண்டு நமது உட்கட்டமைப்பு வசதிகள் ஒருபுறம் நசுக்கி, ஒடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொருபுறம் உரிமைகள் மழுங்கடிக்கபட்டுக் கொண்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் சமஅளவில் கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடு நம் ஒவ்வொருவர் மத்தியிலும் உள்ளன.என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை மத்திய குழுவினால் மருதமுனையில் ஏற்பாடு செய்திருந்த கட்சி ஆதரவாளர்களுடனான ஒன்றுகூடலில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கம்பெரலிய எனும் பாரிய திட்டமொன்று நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதே போல ரண் மாவத் திட்டத்தினூடாக வீதிகள் அனைத்தும் மினுங்குகின்றன. இது தவிர எத்தனையோ அபிவிருத்திகளை ஒவ்வொரு அமைச்சினூடகவும் அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதை சரியாக பெற நாம் அரசாங்கத்தின் பங்காளிகளாக மாறவேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல்கள் உள்ளன. அவற்றில் மருதமுனைக்கு என்று விஷேட பல திறமைகள் உள்ளன. தேசிய ரீதியாக பிரகாசிக்கும் அரசியல், நிர்வாகம், அறிவு ரீதியானவர்கள் பெரும்பாலும் மருதனையில் உள்ளார்கள். இது இந்த மண்ணுக்கு பெரிதொரு வளம் அவற்றை பிரயோகிக்க வேண்டியது நமது கடமை. கிட்டத்தட்ட 4 கோடி ரூபா பெறுமதியளவில் இம் மண்ணில் இரு கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இது போன்ற இன்னும் பல திட்டங்களால் நாடு மிளிருகின்ற சந்தர்ப்பங்களில் கட்சியினூடாக ஏனைய அனைத்து ஊர்களுக்கும் அபிவிருத்திகளை விருத்தி செய்ய எத்தணித்துக் கொண்டிருக்கின்றோம். அதற்கான முன்னொழிவுகளையும், செயற்றிட்ட அறிக்கைகளையும் தயாரித்து கட்சியின் அமைப்பாளர்களாகியவர்கள் என்னிடம் ஒப்படையுங்கள் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுக்க நான் முழு மூச்சாக செயற்படுவேன்.
ஆகவே, இவை எல்லாவற்றையும் சமமான சூழலில் செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இருப்பினும் அபிவிருத்தி எனும் விடயத்தில் எனக்குள்ள அவா மக்கள் முன்னிலையில் மேலோங்கும் பலவித அபிவிருத்திகளை கொண்டுசெல்ல எத்தணிக்கின்றது. அதற்காக திறம்பட முன்னெடுப்புக்களை மேற்கொள்வேன்.
அதற்கான முனைப்புக்களுடன் அகில மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்கும் இவ்வாறான ஒன்றுகூடல்கள் அடிக்கடி ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் திறம்பட்ட மக்கள் சக்தியுள்ள கட்சியாக இக் கட்சியை வளர்க்க நாம் அனைவரும் முனைய வேண்டும்.என்றார் .



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -