சவூதி அரேபியாவின் நஜ்ரான் பிரதேசம் வீழ்ந்தது. ஏராளமான சவூதி இராணுவத்தினர்கள் சரணடைந்துள்ளனர்.


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-

வூதி அரேபியாவின் நஜ்ரான் பிரதேசங்களை ஹௌதி இஸ்லாமிய படையினர்கள் கைப்பேற்றி உள்ளதுடன், ஆயிரக்கணக்கான சவூதி இராணுவத்தினர்களை கைது செய்து, கனரக ஆயுதங்களையும் கைப்பேற்றி உள்ளதாக ஹௌதி இயக்க பேச்சாளர் ஜெனெரல் சாரியாவை மேற்கோள்காட்டி சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
நஜ்ரான் மாகாணம் என்பது சவூதி அரேபியாவின் தென்மேற்கு பிரதேசத்தில் யேமன் நாட்டின் எல்லை அருகே உள்ளது. யேமனில் ஈரானிய ஆதரவு பெற்ற ஹௌதி இஸ்லாமிய போராளிகளுக்கும் சவூதி இரானுவத்தினர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக சண்டைகள் நடைபெற்று வருகின்றது.

ஆனாலும் யேமனில் உள்ள ஹௌதி இராணுவத்தினர்களின் நிலைகள் மீது சவூதி அரேபியா நடாத்துகின்ற விமானத்தாக்குதல்கள் சர்வதேச கவனத்தை ஈர்ப்பது போன்று, சவூதி - யேமன் எல்லை அருகே நடைபெற்று வருகின்ற தரைச் சண்டைகள் பிரபல ஊடகங்களின் கவனத்தினை ஈர்ப்பதில்லை.
அண்மைய சில நாட்களாக நடைபெற்ற உக்கிர சமர் காரணமாக சவூதி அரேபியாவுக்குள் ஊடுருவி நஜ்ரான் மாகாணத்தின் பல பிரதேசங்களை ஹௌதி இஸ்லாமிய படையினர்கள் கைப்பேற்றி உள்ளனர்.
அத்துடன் சவூதி அரேபியாவின் மூன்று இராணுவ பிரிவை சேர்ந்த நிலைகை சுற்றிவளைத்து தாக்கியதில் ஏராளமான இராணுவத்தினர்கள் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கான இராணுவத்தினர்கள் சரணடைந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
சரணடைந்த சவூதி இராணுவத்தினரில் முக்கிய தளபதிகளும் அடங்குவதாக கூறப்படுகின்றது. இது சம்பந்தமாக சவூதி எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
சவூதி அரேபியா தனது அமெரிக்க, இஸ்ரேல் சார்பு கொள்கைகளை கைவிட்டுவிட்டு அனைத்து இஸ்லாமிய நாடுகளுடனும் சேர்ந்து பயணிப்பதுடன், தனது அண்டைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது ஆரோக்கியம் என்பது உலக இஸ்லாமியர்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -