இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தாவது,
இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள், காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, வாழ்வதற்கான நிலப்பற்றாக்குறை, கல்முனையை முஸ்லிம்களிடமிருந்து அபகரிக்கும் முயற்சி, மௌலவி ஆசிரிய நியமனம் என பல பிரச்சினைகளை முஸ்லிம் சமூகம் எதிர் நோக்குகிறது.
இன்றைய காலத்தில் தமிழ் சமூகம் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை விட அதிக பிரச்சினைகளுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுக்கும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்ணை மூடிக்கொண்டு சஜித்துக்கு ஆதரவளிக்காமல் இது பற்றி கலந்துரையாடிக்கொண்டிருக்கிறது.
முஸ்லிம் காங்கிரசின் பெரும் வாக்கு வங்கி கிழக்கில் உள்ள நிலையில் அம்மக்களையோ, அம்மகளின் மக்கள் பிரதிநிதிகளையோ கலந்தாலோசிக்காமல் நிபந்தனையற்ற ஆதரவை ரவூப் ஹக்கீம் வழங்கியமை கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவை முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளை முன் வைத்து ஆதரிப்பது பற்றி முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக கல்முனை மக்கள் பிரதிநிதி சிந்திக்க வேண்டும் என உலமா கட்சி அழைப்பு விடுக்கிறது.