கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி முதுமாணிக்கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களின் பிரிவு உபசார நிகழ்வும், ஆய்வுச் சுருக்க நூல் வெளியீடும் கடந்த வாரம் மட்டக்களப்பு அஞ்சனா மண்டபத்தில் மாணவர்களின் தலைவன் ம.அரியதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இங்கு வருகைதந்த அதிதிகளால் ஆய்வுச் சுருக்க நூல் வௌியிட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எவ்.சி. றாகல், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடாதிபதி எம். ரவி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிள்ளை நலத்துறையின் தலைவர் கலாநிதி செ.அருள்ழொழி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
அவர்களோடுவிரிவுரையாளர்களான கலாநிதி எஸ். சேதுராஜா, சிரேஸ்ட விரிவுரையாளர் கே.ஞானரெட்ணம் (இலங்கை திறந்த பல்கலைகழகம்) மற்றும் தகவல்தொழினுட்ப விரிவுரையாளர் வினுஜனன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள். இதன் போது நூல்களின் பிரதிகள் அதிதிகள், விரிவுரையாளர்கள், மற்றும் மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன் விளையாட்டு, கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.