திருகோணமலையில் i Road காபட் வீதி, பிரதமரால் அங்குராா்ப்பனம்

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சருமான . அப்துல்லா மஃறுாப் அவர்களின் தலைமையில்

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் i Road திட்டத்தினுாடாக திருகோணமலை மாவட்டத்தில் கிராமிய வீதிகள் அபிவிருத்தியின் கீழ் இரண்டாவது ஒருங்கினைந்த வீதி முதலீட்டு திட்டம் காபட் வீதி, புனரமைப்பின் அங்குராா்ப்பன நிகழ்வு இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இன்று (24) சனிக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது

மூதூர் 3சீடி சந்தியில் குறித்த காபட் வீதிக்கான நிகழ்வு பிரதமரால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. 215.93 கிலோமீற்றருக்கான காபட் வீதியே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது
குறித்த இவ் நிகழ்வில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கபீர் காசீம்,பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக்,கே.துறைரட்ணசிங்கம்,இம்ரான் மஹரூப்,சன்திப் சமரசிங்க உட்பட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள்,உள்ளூராட்சிமன்ற தலைவர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -