அமைச்சர் ராஜித வைத்தியசாலை அபிவிருத்திக்குகுழுவினர் சந்திப்பில்பலன்.
காரைதீவு நிருபர் சகா.-களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு உடனடியாக என்டோஸ்கொபி கருவியை வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜிசேனாரத்ன சுகாதாரசேவை பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.
சுகாதார போசணை சுதேசமருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னாவுடன் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலை யின் பதில் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் றொகான் குமார் தலைமையிலான வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடியபோது இந்தப்பலன் கிடைத்துள்ளது.
களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையின் பதில்வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் றொகான் அபிவிருத்திக்குழுச்செயலாளர் எஸ்.பேரின்பநாயகம் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அபிவிருத்திக்குழுவினர் தமது தேவைகளை எழுத்துமூலம் சமர்ப்பித்துக்கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது உடனடியாக என்டோஸ்கோபி கருவியை வழங்குமாறு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பணிப்பாளர்நாயகத்திற்கு பணிப்புரைவிடுத்தார்.
இச்சநதிப்பு நேற்று(29) வியாழக்கிழமை நண்பகல் கல்முனை எஸ்.எல்.ஆர். விடுதியில் நடைபெற்றது.சந்திப்பின்போது முன்னாள் சுகாதார அமைச்சர் பி.தயாரத்னா சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் தமது வைத்தியசாலைக்கு நிபுணர்கள் மற்றும் வைத்தியஅதிகாரிகள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தங்குமிடவசதி குறைபாடிருப்பதாகவும் நிரந்தர வைத்தியஅத்தியட்சகர் நியமிக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
சந்திப் அபிவிருத்திக்குழுவினர் விடுத்த ஏனைய தேவைகளை படிப்படியாக இவ்வருடத்திற்குள் நிறைவேற்றித்தருவதாக அமைச்சர் ராஜித உறுதியளித்தார்.
பிற்கு ஏற்பாடுசெய்த களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம்மக்கள் அமைப்பின் தலைவர் இ.சாணக்கியன் வைத்தியஅத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் ஆகியோருக்கு செயலாளர் எஸ்.பேரின்பநாயகம் நன்றிதெரிவித்தார்.
மட்டுமாவட்டத்தின் பட்டிருப்புத்தொகுதி தொடக்கம் படுவான்கரை பெருநிலப்பரப்பில் வாழும் லட்சக்கணக்கான ஏழைத்தமிழ்மக்களுக்கு சுகாதாரசேவை வழங்கும் ஒரேயொரு வைத்தியசாலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது

