முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஒரு காலத்தில் தோட்டங்களுக்கு அற்ப சொற்ப நிதியே வழங்கப்பட்டன சீமந்து பக்கட்டுக்களும் தகரங்களும் ஒரு சில சிறிய சிறிய உபகரணங்கள் மாத்தரமே தோட்டங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் எமது தலைவர் திகாம்பரம் வந்த பின் தான் தோட்;டங்களுக்கு கோடிக்கணக்கான நிதி வழங்கப்படுகின்றன.
இந்த தோட்டத்திற்கு கூட நாங்கள் ஒரு கோடியே ஆறு லட்சம் நிதியினை வழங்கியிருக்கின்றோம.; முதன்முதலில் இந்த தோட்டத்தில் தனிவீட்டுத்திட்டத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக 10 லட்சம் ரூபா நிதியினை பெற்றுக்கொடுத்தேன.; அதனை தொடர்ந்து பாடசாலை பாதை காபட்யிட்டு புனரமைப்பதற்கு 40 லட்சம்,கோயில் கூரை புனரமைக்க 05 லட்சம்,பிட்டவின் பாடசாலை பாதுகாப்பு நெட் அமைக்க 15 லட்சம்,தனிவீட்டுத்திட்டத்திற்கு செல்லும் பாதை புனரமைக்க 15 லட்சம்,பாடசாலை குடிநீர் திட்டத்திற்கு ஒரு லட்சம் என ஒரு கோடியே 06 லட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளோம். இது இந்த தோட்டத்திற்கு மாத்திரமன்று ஒவ்வொரு தோட்டத்திற்கும் கோடிக்கணக்கில் நிதியினை பெற்றுக்கொடுத்துள்ளோம்.மேபீல்ட் தோட்டத்திற்கு கூட ஒரு கோடியே 20 லட்சம் ரூபா செலவில் காபட் பாதை ஒன்று போடப்பட்டு இன்று வேலை நடைபெற்று வருகின்றது. என முன்னாள் மத்திய மகாhண உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
ரொசல்ல பிட்டவின் தோட்டத்தில் ஒரு கோடி ரூபா செலவில் உருவாக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் நேற்று 30 திகதி மாலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த தோட்டத்தில் வாழும் 120 குடும்பங்களை சேர்ந்த 700 பேர் நன்மையடைகின்றனர்.
இந்த திட்டத்திற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு 20 லட்சம் ரூபாவும் ஹோல்ட் விசன்,பெரண்டினா ஆகிய நிறுவனங்கள் இணைந்து 80 லட்சம் ரூபாவும் செலவு செய்துள்ளன.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று இந்த தோட்டத்திற்கு மூன்று வருடத்திற்கு முன் நான் குடிநீரினை பெற்றுக்கொடுக்க முற்பட்டதனையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.அன்று சுமார் 2 கிலோமீற்றர் தொலைவிலிருந்து குடிநீரினை பெற்றுக்கொடுத்தோம். குடிநீர் என்பது மிகவும் அத்தியவசிய தேவைகளில் ஒன்று ஆகவே இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த தோட்டத்தில் வாழும் அனைவரும் நன்மையடைகின்றனர். இதனை இட்டு இந்த திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.அன்று முதல் இன்று வரை பல தோட்டங்களுக்கு குடிநீர் பிரச்சினை காணப்படுகின்றன. ஆனால் முகாமையாளர் ஸ்ரீகணேசன் அவர்கள் இந்த தோட்டத்திற்கு மாற்றும் பெற்று வந்த பின்பு தான் இந்த தோட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.இவர் முகாமையாளராக மற்றும் அல்லாது சமூக அக்கறை கொண்டவர். என்பதனால் இவ்வாறான மக்கள் நல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.அவரின் முயற்சியில் தான் இன்று இந்த திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அவர் பெரண்டியா ஹோல்ட்;விசன்,அமைச்சு ஆகியவற்றிடம் தொடர்பு கொண்டு இதனை நிறைவு செய்துள்ளார்.இதே போன்று தான் விக்டன் டெம்பஸ்டோ ஆகிய தோட்டங்களிலிருந்து குடிநீர் பெறுவதில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டன. அவற்றிக்கெல்லாம் அவர் முன்னிருந்து செயப்பட்டதன் காரணமாகத் தான் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த குடிநீர் தி;ட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி நலன் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு முன்னாள் அம்பகமுவ பிரதேச சபைத் தலைவரும் அமைச்சின் இணைப்பு செயலாளருமான நகுலேஸ்வரன் தோட்ட முகாமையாளர் ஸ்ரீ கணேசன்,ஹோல்ட் விசன் லங்கா மற்றும் பெராண்டினா நிறுவனத்தின் உயரதிகாரிகள்,உட்பட தோட்ட கமிட்டி தலைவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.