ஏறாவூர் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற அநியாயங்கள் ஆவணப்படுத்தப்படவில்லை

ஏஎம் றிகாஸ்-

ட்டக்களப்பு- ஏறாவூர்ப்பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆந்திகதி இரவு தமிழீழ விடுதலைப் புலிகளினால் கோரமாகப் படுகொலைசெய்யப்பட்ட 121 அப்பாவி முஸ்லிம்களது நினைவினை வருடந்தோறும் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னின்று நடாத்துவதற்காக 'ஏறாவூர்- ஸ{ஹதாக்கள் நினைவுப் பேரவை" என்ற பெயரில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்- மஸ்ஜிதுந்நூறுஸ்ஸலாம் மையவாடி பள்ளிவாயலில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் அல்ஹாஜ் எம்;எல். அப்துல் லத்தீப் இவ்வமைப்பின் தலைவராக ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வமைப்பு இவ்வருடம் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளை மார்க்க அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் ஜனரஞ்சக அடிப்படையில் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

ஸ{ஹதாக்கள் நினைவு தினம் ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்றபோதிலும் ஏறாவூர் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற அநியாயங்கள் ஆவணப்படுத்தப்படவில்லை. அத்துடன் உரியமுறையில் உலகறியச் செய்யப்படவில்லை என்பனபோன்ற குறைபாடுகளைக்கருத்திற்கொண்டு இவ்வமைப்பு கருமங்களை முன்னெடுக்கவுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 12 ஆந்திகதி மாலை ஸ{ஹதாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள பொதுமையவாடிப்பள்ளி வாயலில் யூஎல். தாவூத் சேர் மற்றும் ஸ{ஹதாக்கள் நினைவு தின நிகழ்வுகளை நடாத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ்ஜுப் பெருநாள் இரவு ஏறாவூர் முஸ்லிம்களின் சமூகக்குரலான கல்விமான் யூஎல். தாவூத் சேர் தமிழீழ புலிகளினால் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -