ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பாக கருத்துக் கேட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம். ரி. ஹசன் அலி

பாறுக் ஷிஹான்-  
திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்கின்ற விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம். ரி. ஹசன் அலி மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்.
இச்சந்திப்பானது நிந்தவூர் மாவடி முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை(4) மாலை 4:30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் நிறைவடைந்தது.

இக்கூட்டத்துக்கு வருகை தந்த பொதுமக்களிடம் கட்சியின் பிரதான கொள்கை மற்றும் எதிர்கால ஜனாதிபதி தேர்தல் குறித்தும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம். ரி. ஹசன் அலி விரிவாக விளக்கமளித்தார்.
இதன் போது சமகால அரசியல் குறித்து தெளிவுகளைப்பெற்ற அனைவரும் தத்தமது கருத்துக்களை சபையில் தெரிவித்ததுடன் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி அவற்றை தனது குறிப்பு புத்தகத்தில் எழுத்தில் எழுதி கொண்டதை காண முடிந்தது.
மேலும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் எழுத்தாளருமான எம்.ரீ ஹசன் அலி கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடிய விடயங்களை இறுதியாக ஊடகவியலாளர் சந்திப்பில் விரிவாக விளக்கமளித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -