மல்லிகைத்தீவில் குடிநீர் நச்சுநீராகியதால் மேலும் மூவர் சிறுநீரகநோயினால் பாதிப்பு: யாரும் கவனிப்பதாயில்லை!

காரைதீவு நிருபர் சகா-
குடிநீர் நச்சுநீராக மாறிவருவதனால் மல்லிகைத்தீவுக் கிராமத்தில் மேலும் மூவர் சிறுநீரகநோய்க்கு இலக்காகியுள்ளனர்.
ஏலவே இங்கு சிறுநீரகநோயினால் பாதிக்கப்பட்டு மூவர் மரணமாகியதுடன் ஆறுபேர் சிறுநீரகநோய்க்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தையையடுத்துள்ள மிகவும் பின்தங்கிய மல்லிகைத்தீவு கிராம தமிழ்மக்கள் மரணபயத்துடன் வாழ்ந்துவருகிறார்கள்.அங்கு 95குடும்பங்களைச்சேர்ந்த 275பேர் வாழ்ந்துவருகின்றனர்.
அங்குள்ள பொதுக்கிணறு உள்ளிட்ட சகல 42கிணறுகளிலும் கல்சியம் மற்றும் விவசாயத்திற்குப்பயன்படும் இரசாயனப்பொருட்கள் கலந்துள்ளதால் நீர் நஞ்சாகமாறிவருகிறது. அதனால் அங்குள்ள மக்கள் சிறுநீரக நோய்க்கு ஆளாகிவருகின்றனர்.
இப்பிரச்சினை வெளிஉலகிற்கு கொண்டுவரப்பட்டு பலமாதங்களாகியும் ஆக சம்மாந்துறை பிரதேசசபையின் உபதவிசாளர் வெ.ஜெயச்சந்திரனைத்தவிர இதுவரை யாரும் வந்துபார்க்கவுமில்லை என்பதுடன் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையினர் இக்கிராமத்திற்கு குழாய்களைப்பதித்து குடிநீர் வழங்கினால் மாத்திரமே இப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வுகாணலாம்.
இதற்கான நடவடிக்கைகளை தமிழ்மக்களின்காவலர்கள் என்று சொல்வோர் நடவடிக்கை எடுப்பார்களா? இது பொதுமக்களின் கோரிக்கையாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -