போரா சமுகத்தினரின் ஆசரா தின சர்வதேச மாநாடு!

அஸ்ரப் ஏ சமத்-
போரா சமுகத்தினரின் ஆசரா தின சர்வதேச மாநாடு எதிா்வரும் செப்டம்பா் 01- 10ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. இதற்காக உலகில் உள்ள 40 நாடுகளிலிருந்து 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட போரா சமுகத்தினா் கொழும்புக்கு வருகை தந்த வன்னம் உள்ளனா். இதற்காக சர்வதேச பண்டார நாயக்க ஞாபாகாா்த விமான நிலையத்தில் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. என சுற்றுலத்துறை அமைச்சா் ஜோன் அமரதுங்க (23 திதகி அமைச்சில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தாா்..
உயிா்த்த ஞயிறுதாக்குதலுக்குப் பிண்னா் இலங்கையில் மிகப் பெரிய சுற்றுலத்துறைக்கு போரா இன முஸ்லிம்கள் 40 ஆயிரம் பேர் கொழும்பில் உள்ள சகல கோட்டல் அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இம் மாநாட்டுக்காக 3000 பொலிஸ், பாதுகாப்பு படையினா் , கொழும்பு மநாகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலாத்துறை அதிகார சபை சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.
இம்மாநாட்டில் போரா சமுகத்தின் தலைவா் கலாநிதி செய்தினா முப்படேல் சைபுத்தீன் உட்பட அந்தந்த நாடுகளின் தலைவா்களும் இம் மாநாட்டில் பங்கு பற்றி வருடா வருடம் நடைபெற்று வரும் -ஆசாரா தினத்தினை கொண்டாடுவாா்கள். இதன்போது இச் சமுகத்தினா்கள் பிரச்சினைகள் அந்தந்த நாடுகளின் அறிக்கைகளும் ஆராயப்படும். இங்கு வருகை தருபவா்கள் இலங்கையில் 10 நாட்கள் கலந்து கொள்வதற்காக கொழும்பு கண்டி, நுவரேலியா நீர்கொழும்பு காலி போன்ற இடங்களில் உள்ள கோட்டல்களில் அறைகளை ஒதுக்கியுள்ளனா்.. இவ் சுற்றுலாப்பிரயாணிகள் வருகையினால் அண்னியச் செலவாணி அமேரிக்க டொலர் 50 மில்லியன் ருபா இலங்கைக்கு வருமானமாக கிடைக்கின்றது.
இச் சமுகத்தின் மாநாட்டின் பின்னா் உலகில் உள்ள பல நாடுகள் இதுபோன்ற சர்வதேச மாநாடு கூட்டங்கள3க்கு இலங்கை ஒரு அமைதியான சமாதான நாடாக பரைசாற்றப்படும். இம்மாநாட்டினை நடாத்துவதற்கு இலங்கையின் ஜனாதிபதி, பிரதமா் உட்பட பாதுகாப்பு படையினா் உள்ளுர் தொண்டா்கள் 3000பேரும் ஈடுபட அரசாங்கம் வழி சமைத்துக் கொடுத்துள்ளதாக அமைச்சா் ஜோன் அமரதுங்க தெரிவித்தாா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -