Ashraff.A.Samad-
Launching of an Invaluable, Motivational Poetry Collection “INNER
WINGS” by Inspiring Heart Miss. Nuha Rizan.
Who is this Young Lady? A Sri Lanka, non-native speaker of English,
also a teenager of only eighteen years old.
Book Launching ceremony will be held 16th July 2019 at 03.00 pm at
Hotel Sapphire , Wellawatha Colombo -06
Chief Guest Prof. S.Chanderasekran
பதுளையைச் சேர்ந்த நுஹா ரிஸான் எழுதிய Inner Wings என்ற ஆங்கில கவிதை நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு கொழும்பு 06 வெள்ளவத்தையில் அமைந்துள்ள சபாயா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
தேசிய மொழிகள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிகள் பிரிவின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் ஆரியரத்ன பிரதம பேச்சாளாராகவும் கலந்து கொள்கிறார்.
பன்னூலாசிரியரும் கல்வி ஆலோசகரும் ஆய்வாளருமான கலாநிதிஅஷ்ஷெய்ஹ் ரவூப் ஸெய்ன், தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சின் பணிப்பாளர் அஷ் ஷெய்ஹ் ஏ.பீ.எம் அஷ்ரப்(நளீமி) ஆகியோர் கெளரவ அதிதிகளாக இந் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னுவாசிரியருமான கே.எஸ் சிவகுமாரன் நூலை ஆய்வு செய்கின்றார்.
தன் முனைப்படுத்தலை மையப் பொருளாக கொண்ட கவிதைகளாகவே அனைத்து கவிதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நேர்மறை எண்ணங்களையும் இலக்கு நோக்கிய செயற்பாட்டு உந்துதலையும் இந்நூல் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆங்கில மொழியில் இலங்கையில் வெளிவரும் தன் முனைப்படுத்தல் பற்றிய முதல் கவிதை நூலாக இது இருப்பது பாராட்டத்தக்கது..
தனது 18 ஆவது வயதில் நூலொன்றை வெளியிட நினைத்த கவிதாயினி நுஹா ரிஸான் அவர்கள், கவிஞரும் எழுத்தாளருமான அஷ் ஷெய்ஹ் எம்.ரிஸான் ஸெய்ன், பாத்திமா பர்ஸானா ஆகியோரது மூத்த புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

