சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க கூடிய ஆட்சியை எதிர்காலத்தில் நிலை நிறுத்துவோம்-மஃறூப் எம்பி

ஹஸ்பர் ஏ ஹலீம்-

னி வரும் காலங்களில் சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க கூடிய ஆட்சியை நிலை நிறுத்துவோம் எமது சமூகத்தின் பாதுகாப்பையும் உரிமையோடு இந்த மண்ணில் வாழ வேண்டிய நிலையான ஆட்சியாளர்களை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதியோடு இருப்போம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக் கிழமை(14) கலந்து கொண்ட கிண்ணியா மத்திய கல்லூரியின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்

1989 ம் ஆண்டுக்கு முன் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களோடு அரசியல் பயணத்தில் பயணித்து அதற்கு பின் எம்.ஈ.எச்.மஹரூப் அவர்களோடு அவர் மரணிக்கும் வரை அரசியலில் பயணித்து தொடர்ச்சியானக கட்சியின் பங்காளியாக செயற்பட்டுள்ளேன்.

இதனூடாக அன்றைய நிலையில் இருந்தே பிரதமருடனும் அரசியல் பயணத்தில் பயணித்துள்ளேன்.
சிறுபான் சமூகத்தை அரவனைத்து செல்லக் கூடிய ஒரே தலைவனாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க திகழ்கிறார்.

நாட்டிலுள்ள பல்வேறு திட்டங்கள் ஊடாக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகிறது இதை தாங்கி கொள்ள முடியாத ஒரு சில கூட்டம் பாராளுமன்றுக்கு உள்ளுக்குள்ளும், வெளியிலும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனையை முன்வைக்கிறார்கள் .

இலங்கையில் வாழும் சக இனங்களான முஸ்லிம்,தமிழ், மலையக மக்கள் பிரதமர் மீது கொண்ட நம்பிக்கையினால் ஜாதி ,மத பேதமற்ற அரசியலை செய்து வருகிறார்கள்.
இன ஐக்கியத்தையும் சமுகத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடிய கால கட்டமே இது.

கல்வி ரீதியான கொள்கையை அன்றைய கல்வி அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டுள்ளார் அதனை இன்று அகில விராஜ் திறம்பட நடை முறைப்படுத்துகிறார் இது போன்று ஏனைய கம்பரெலிய வீதி அபிவிருத்தி போன்றவற்றை கபீர் காசிம் நடை முறைப்படுத்துகிறார்.

இளைஞர்களுக்கான தனியான வழிகாட்டல்களை அப்போதே பிரதமர் செய்து காட்டியுள்ளார்.யுத்த சூழ் நிலையின் போது ஆயுதங்களை கீழே வைத்து விட்டு பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு அழைத்து வெற்றி கண்டுள்ளார்.

சிறந்த கல்விச் சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும் திருகோணமலை மாவட்டத்தில் மூதூரில் 88,கிண்ணியாவில் 66 பாடசாலைகள் காணப்படுகின்றன தேசிய ரீதியில் 98 கல்வி வலயங்கள் காணப்படுகிறது கிண்ணியாவை கல்வியில் முன்னேற்ற நாம் சிறந்த கொள்கை ஊடாக செயற்பட்டு அதை வெற்றிகொள்வதன் ஊடாக முன்னேற்ற வேண்டும்.

கல்விக்கான சிறந்த கொள்கைகளை உருவாக்கி பல்கலைக்கழகம் சென்று வெளியேறிய மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராட முடியாத உடனடி அரச துறையில் நியமனங்களை வழங்குவதன் ஊடாக வீதிப் போராட்டங்களை தடுக்க முடியும்.

சந்திரிக்கா அம்மையார், மஹிந்த கால ஆட்சியைப் போலல்லாது இந்த ஆட்சியில் நிலையான பொருளாதார ரீதியான திட்டங்களை வெற்றி கொள்ள தானும் தனது கட்சியும் செயற்பட்டு வருகிறோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -