வெயாங்கொடை, வந்துரவ பகுதியில் உள்ள ரயில் கடவையில், மோட்டார் சைக்கிளில்
சென்ற தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.
நேற்று (15) திங்கட்கிழமை காலை 6.45 மணியளவில் வெயாங்கொடை, வந்துரவ ரயில் கடவை வழியாகப் பயணித்த தந்தையும் (45) அவரது மகளுமே (11) இவ்வாறு பலியாகியுள்ளனர் என வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மோட்டார் சைக்கிள், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு - கோட்டையை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இருவரும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக, வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தார்.
இரு சடலங்களும், வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான விசாரணைகளை வெயாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
