கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்திற்கு முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் விஜயம் செய்து குறைநிறைகளை கேட்டறிந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை(23) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நிலையில் கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்திற்கு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் அழைப்பை ஏற்று குறித்த பாடசாலைக்கு சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து அப்பாடசாலையில் கடமையாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர் மாணவர்களை சந்தித்து குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் அப்பாடசாலை சகல வளங்களுடன் அபிவிருத்தி அடைய முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இவ்விஜயத்தின் போது தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக உப செயலாளர் எஸ். சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுரேந்தர், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், மற்றும் ஊடக உதவியாளர் எம். சதீஸ் உள்ளீட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.