கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்த மு.முதலமைச்சர் விக்னேஸ்வரன்

பாறுக் ஷிஹான்-

ல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் விஜயம் செய்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை(23) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நிலையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு சென்ற அவரை அங்கு கடமையாற்றும் பிரதேச செயலாளர் எ.ஜே.அதிசயராஜ் வரவேற்றார்.

இதன் போது கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக நியமிக்கப்பட்டதாக கூறப்பட்ட கணக்காளர் அவரது பதவியை இதுவரை உத்தியோகபூர்வமாக ஏற்கவில்லை ஏன் என வினவியதுடன் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையின்போது கணக்காளர் நியமனம் சம்மந்தமான உத்தியோக பூர்வ கடிதம் வழங்கப்பட்டமையால் பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட கணக்காளர் இன்னும் வருகை தராமை வேதனையளிப்பதாக குறிப்பிட்டார்.



இதன் போது தமிழ் மக்gகள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக உப செயலாளர் எஸ். சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுரேந்தர், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், மற்றும் ஊடக உதவியாளர் எம். சதீஸ் உள்ளீட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த காலத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு நீதி கோரி அண்மையில் உண்ணாவிரதப்போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் கல்முனை பிரதேச மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் அரசிடமும் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தொடர் அழுத்தத்தையும் பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -