சம்பியன் கிண்ணத்தை பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணி கைப்பற்றியது

அகமட் எஸ். முகைடீன்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெற்றிக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2019 இன் சம்பியன் கிண்ணத்தை பொத்துவில் ஆதார வைத்தயசாலை அணி சுவீகரித்துக்கொண்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிற்கு தெரிவு செய்யப்பட்ட கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணி மற்றும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணி என்பவற்றுக்கிடையிலான போட்டி இன்று (21) ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இவ் இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார், கொளரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். அருள்குமார், விஷேட அதிதிகளாக அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி ஏ.எல்.எப் ரகுமான், கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எம். ஜவ்பர், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் அறுவைச்சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். சித்தீக் ஜெமீல், பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ், திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ரி.எஸ்.ஆர்.ரி.ஆர் றஜாப், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.எப்.ஏ. ஹலீம், சுற்றுப்போட்டி எற்பாட்டுக் குழுத் தலைவர் வைத்திய கலாநிதி நாகூர் ஆரிப், மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கல்முனை பிராந்தியத்திலுள்ள மத்திய மற்றும் மாகாண நிருவாகங்களின் கீழுள்ள ஏழு ஆதார வைத்தியசாலைகளின் அணிகள் மற்றும் பிராந்திய பணிமனை அணியுமாக எட்டு அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டி 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு நொக்கவுட் முறையில் நடைபெற்றது.

நேற்றைய தினம் ஆரம்பமான இச்சுற்றுப்போட்டியில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அணியினை எதிர்த்து கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணியினரும் கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை அணியினரை எதிர்த்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அணியினரும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை அணியினரை எதிர்த்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அணியினரும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணியினரை எதிர்த்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அணியினரும் மோதி அரையிறுதிப் போட்டிக்கு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அணி, பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணி, கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை அணி ஆகியன தெரிவு செய்யப்பட்டன.
இன்று நடைபெற்ற அறையிறுதிப்போட்டியில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணியினரை எதிர்த்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அணியினரும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணியினரை எதிர்த்து கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை அணியினரும் மோதி இறுதிப்போட்டிக்கு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணி மற்றும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணி ஆகியன தெரிவு செய்யப்பட்டன.
இவ் இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணி களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணி சகல பந்துவீச்சுக்களையும் எதிர்கொண்டு 3 விக்கட்டுக்களை இழந்து ஒன்பது ஆறு ஓட்டங்கள் மற்றும் ஒரு நான்கு ஓட்டம் அடங்கலாக 126 ஓட்டங்களை பெற்றது.
வெற்றி இலக்கான 127 ஓட்டங்களை பெறும்வகையில் பதிலுக்கு துடுப்படுத்தாடிய கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணி சகல ஓவர்களும் பூர்த்தியடைந்த நிலையில் 7 விக்கெட்டுக்களை இழந்து 75 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணி 51 மேலதிக ஓட்டங்களால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெற்றிக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2019 இன் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை 31 பந்து வீச்சுக்களை எதிர்கொண்டு 61 ஓட்டங்களையும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிய பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணியின் வீரர் எஸ்.எச்.எம். சிபானும், இச்சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்ட நாயகன் விருதை 3 போட்டிகளில் விளையாடி 48 ஓட்டங்களையும் 5 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணி வீரர் எஸ்.எம். ஆதிலும் பெற்றுக்கொண்டனர்.





























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -