ஓமந்தை கோட்டத்தின் பாலர் விளையாட்டு விழாவில் கெளரவ காதர் மஸ்தான் உரை.
பாலர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தும் களமாக இந்த விளையாட்டுக்கள் விளங்குகின்றன.அவர்களுக்கிடையில் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர நாம் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் போது அவர்கள் தமது ஆற்றல்களை வெளிப்படுத்துவதை நாம் காண முடியும்.
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.
இன்று வவுனியா ஓமந்தை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட இருபத்தாறு முன்பள்ளிச் சிறார்கள் பங்குபற்றும் விளையாட்டு விழா வவுனியா மரக்காரம்பளை ஐங்கரன் விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது இன நல்லிணக்கம் பற்றி இன்று அதிகமாக பேசப்படுகிறது.
அது சிறுபராயத்திலிருந்து ஊட்டப்பட வேண்டிய அடிப்படை அம்சமாகும்.
நல்ல பண்புகள், விட்டுக் கொடுப்புக்களோடு உறவாடுதல் என்பனவற்றை விளையாட்டுக்கள் கற்றுத் வருவதுடன் பரஸ்பர ஒற்றுமைக்கும் அடிகோலிடுகின்றன எனவும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் வவுனியா வடக்கு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சூரியச்செல்வன் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் ராஜேஷ்வரன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.