ஆனந்த சங்கரி ஐயா என்னை கட்சியிலிருந்து நீக்குவதாக வெளிநாட்டிலிருந்து அறிக்கை விட்டிருப்பதை கண்டிக்கிறேன்


 கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ் 
எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை பிரதேசத்திலே நீண்ட காலமாக தமிழ், முஸ்லிம் உறவை வலுப்படுத்த நாங்கள் செயற்பட்டு வருகின்றேபோது, ஆனந்த சங்கரி ஐயா என்னை கட்சியிலிருந்து நீக்குவதாக வெளிநாட்டிலிருந்து அறிக்கை விட்டிருப்பதை கண்டிக்கிறேன் என கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ் தெரிவித்தார்.
இன்று (25) கல்முனை மாநகர சபை அமர்வு முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ் மேலும் உரையாற்றும் போது,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அவர்கள் வெளிநாட்டிலிருந்து அறிக்கை விட்டிருக்கின்றார், கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வரான காத்த முத்துகணேஷ் ஆகிய நானும் எனது சக உறுப்பினர் சுமித்ரா ஜெகதீசன் ஆகிய இருவரையும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக வெளிநாட்டிலிருந்து அறிக்கை விட்டிருக்கின்றார்கள். நான் அவருக்கு இந்த உயரிய சபையில் இருந்து ஒரு சவால் விடுக்கிறேன் உண்மையிலேயே அவரால் முடிந்தால் என்னை நீக்கி பார்க்கட்டும்.
அவர் ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ள வேண்டும், நாங்கள் இந்த கல்முனை மாநகர பிரதேசத்திலே நாங்கள் இருவரும் இல்லை என்றால் அவரது கட்சி எந்தவிதமான பிரச்சாரத்திலும் ஈடுபட்டுடிருக்க முடியாது. கடந்த தேர்தலிலே எங்களுக்கு கிடைத்த வாக்குகள் தமிழர் விடுதலைக் கூட்டணி என்கிற கட்சிக்கு கிடைத்த வாக்கல்ல. மாறாக தமிழ்  மக்கள் எங்களுக்கு வழங்கிய வாக்காகும்.
ஆனால் இப்பொழுது எந்தவிதமான முன்னறிவித்தலும் தகவலும் வழங்கப்படாமல் எங்களை கூப்பிட்டு பேசாமல் இந்த மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்து நீக்குவதாகவும் அதுபோன்று உறுப்புரிமையும் பறிப்பதாகவும் அவர் இப்பொழுது வெளிநாட்டிலிருந்து அறிக்கை விட்டிருக்கின்றார்.
நாங்கள் இந்த கல்முனை மாநகர பிரதேசத்திலே தமிழ் முஸ்லிம் உறவினை கட்டி எழுப்புவதற்காக பல்வேறுபட்ட தியாகங்களைச் செய்து செயற்பட்டு வருகின்றோம். அதனால் இந்த விடயங்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. முஸ்லிம் மக்களுக்காக நாங்கள் பதவியை துறந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் சரி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டாலும் சரி நாங்கள் வெளியில் இருந்து முஸ்லிம் தமிழ் உறவை மேலும் மேலோங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் சேவை செய்வோம்.
சென்ற காலங்களிலே இந்த ஆனந்தசங்கரி ஐயா அவர்களால் எங்களது தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கி நசுக்கப்பட்டதை மறந்துவிட்டு இப்பொழுது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்று சொல்கின்றார்.

அவர் அப்போது முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்குங்கள் என்று எங்களிடம் கூறியதன் பிரகாரமே நாங்கள் ஆதரவு வழங்கினோம். முஸ்லிம் தமிழ் உறவை மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றோம் இப்பொழுது ஆதரவிலிருந்து நீக்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார் அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி கொண்டிருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.
எனவேதான் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம் இங்கே அவர் விடுகின்ற அறிக்கைகளுக்கு நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. முடிந்தால் அவர் எங்களை நீக்கி காட்டட்டும். ஆனால் நாங்கள் முஸ்லிம் மக்களுக்காகவும் முஸ்லிம் தமிழ் உறவை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு சேவைகளை செய்வோம் என்பதில் எந்த விதமான ஐயமும் இருக்க முடியாது என்பதை உறுதிபடக் கூறி கொள்ள விரும்புகின்றேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -