அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் அலுப்புவத்தை ஆகிய இரு தோட்டங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 22 பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக் குளவிகளின் தாக்குதல் இன்று (25) மாலை மூன்று மணிக்கும் நாலு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது அக்கரபத்தனை பெல்மோரல் கிளேஸ்ட்டல் பிரிவை சேரந்த ஏழு பேரும் டொரிங்டன் அலுப்புவத்தை பரிவில்;; 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குளவி தாக்குதல் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருக்கும் போது மரத்தில் கட்டியிருந்த குளவிகள் களைந்து தாக்குதல் நடத்தியுள்ளன.
இத்தாக்குதலில நான்கு தொழிலாள பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்குளவி தாக்குதலுக்கு 20 இருபது தொழிலாளி பெண்கள் ஒரு ஆணும் உள்ளடங்குவதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறித்த நோயாளர்களை பார்ப்பதற்கு வைத்தியர் வர சுணங்கியதாலும் வைத்தியசாலை மருந்து தட்டுப்பாடு நிலவுவதாலும் இங்கு அமைதியின்மை ஏற்பட்டது அதனை தொடர்ந்து அக்கரபத்தனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையினை அமைப்படுத்தினர்.
இது குறித்து தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் அண்மைக்காலமாக தோட்டங்கள் காடாக மாறியிருப்பதனால் குளவிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளன.இதனால் மரங்களில் மாத்திரமின்றி தேயிலை செடிகளிலும் குளவிகள் கட்டுகின்றன. இதனால் தொழிலாளர்கள் தொழிலி;ல் ஈடுபடும் போது இக்குளவிகள் தாக்குவதாகவும்இ இது குறித்து உரியர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. என்றும் தொழிலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் இருந்த போதிலும் தேயிலை கொழுந்தினை பறிபக்குமாறு தோட்ட நிரவாகம் அலுத்தம் கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து அரசியல் தொழிற்சங்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.