பதிவுசெய்யப்பட்ட இரண்டாம் மொழிகற்பித்தல் வளவாளர் தரப்படுத்தலில் நுவரெலியா மாவட்ட வளவாளர்கள் புறக்கணிப்பு.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

தே
சிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் பதிவு செய்யப்பட்ட இரண்டாம் மொழி கற்பித்தல் வளவாளர்கள் தேசிய ரீதியில் தரப்படுத்தலுக்கான நேர்முக பரீட்சை அண்மையில் நடைபெற்றுள்ளது.இந்த நேர்முக பரீட்சையில் நுவரெலியா மாவட்ட்ட இரண்டாம் மொழிக்ல்வி பயிற்றுவிப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இந்த மாவட்டத்தைச்சேர்ந்த வளவாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் தேசிய நல்லிணக்கம் சமூக ஒருமைபாடு சகவாழ்வு ஏற்படுவதற்காக அரச உத்தியோகஸத்தர்களுக்கு கடந்த 2009 ம் ஆண்டு தொடக்க இந்த நிறுவனத்தின் மூலம் பிரதேச செயலகங்கள்,வைத்தியசாலைகள்,பாதுகாப்பு பிரிவினரை சேர்ந்த இரானும்,பொலிஸ் உயரதிகாரிகள், உட்பட பலரை குறித்த பயிற்றுவிப்பாளர்களினால் இரண்டாம் மொழியான தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வந்துள்ளனர்.

குறி;த்த வளவாளர்க்கு பாரிய அனுபவம் திறமைகள் காணப்பட்ட போதிலும், இந்த தேசிய தரப்படுத்தலுக்கு இவர்களை அழைக்கப்படவில்லை. என்றும் அதற்கு பதிலாக தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது குறித்து பலர் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் சுமார் 2009 காலப்பகுதியிலிருந்து குறித்த நிறுவனத்தில் இரண்டாம் கற்பித்து வருகின்றோம.; இரண்டாம் மொழி வளவாளர்களாகிய நாங்கம் பத்திரிகை விளம்பரம் ஒன்றின் பின் 8000 ரூபா பணத்தினை செலுத்தி பயிற்சி பெற்று, அதனை தொடர்ந்து நேர்முக பரீட்சையின் இந்த பதிவியில் இணைந்து கொண்டு நாடு முழுவதும் உள்ள, அரச நிறுவனங்களில் உள்ள அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு பயிற்றுவித்துள்ளோம்.

இந்த நிறுவனத்தின் செயப்பாடுகள் முறையாக இயங்கி வந்த போதிலும் நல்லாட்சி அரசாங்கம் வந்ததன் பின் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றன. குறிப்பாக அடிப்படை கல்வி தகைமைகள் கூட இல்லாத பலர் இதில் சேவையாற்றியதன் காரணமாகவும் சிலர் கடைகளில் வேலை செய்பவர்கள் கூட இதில் பயிற்;றுவிப்பாளர்களாக இணைந்து கொண்டதன் காரணமாக பயிற்சிக்க வந்த உயர் பதிவிவகித்த அரச உத்தியோகஸ்த்தர்களிடமிருந்து எதிர்ப்புக்களும் கிளம்பின. 

அதனை தொடர்ந்து இந்த நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டவர்களை அழைத்து அவர்களுக்கு மீண்டும் நேர்முக தேர்வு ஒன்று வைத்து அவர்களை மேலும் பயிற்றுவித்து இரண்டாம் மொழி கற்பிப்பதற்கான அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டு நாடு முழுவதும் இவர்களை கொண்டு இரண்டாம் கற்பித்தல்களையும் மேற்கொண்டனர்.

இந்த கற்பித்தல் நடவடிக்கையின் மூலம் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டமையினாலும், பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டமையினாலும் இவர்களுக்கு பலத்த அனுபவமும் ஏற்பட்டு வந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கம் வந்த பின் குறித்த பயிற்றுவிப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டு தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அரச கரும மொழிகள் மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பல முறை அறிவித்துள்ளதாகவும், எனினும் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்றும்,இதனால் பலர் விரக்த்தியடைந்துள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து உரிய கவனமெடுத்து இவர்களுக்கு நியாயத்தினை பெற்றுக்கொடுக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -