ஏ .எம். றிகாஸ்-
கிழக்கு மாகாண இராணுவ கட்டளையதிகாரி, அரசியல் பிரமுகர்கள் மற்றும் சர்வமத தலைவர்களும் கலந்துகொண்ட நோன்பு திறத்தல் இப்தார் நிகழ்வு 01.06.2019 மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு- ஏறாவூர் நகர சபை மற்றும் சன சமூக நிலைய சம்மேளனம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் நகர சபை முதல்வர் ஐ. அப்துல் வாஸித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா , கிழக்கு மாகாண இராணுவ கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, லெப்டினன் கேர்ணல் தம்மிக குணதுங்க, லெப்டினன்ட் கேர்ணல் பிரியன்த ரணதுங்க, மற்றும் கெப்டன் ஜே. நபீர் பிரதேச செயலாளர் வீ.யூசுப் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாட்டில் இனங்கள் மத்தியில் புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் ஏற்பட வேண்டி இங்கு விசேட பிரார்த்தனையும் நடாத்தப்பட்டது.