கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி நாட்டில் முஸ்லிம் பெயர்தாங்கிகளால் மேற்கொள்ளப்பட்ட உயிர்தெழுந்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களினால் முஸ்லிம் சமூகம் இன்றுவரை பல துயரங்களை அனுபவித்து வருவதை யாரும் மறக்கமுடியாது.
இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் பலிகளில் இருந்து சமூகத்தை விடுவிப்பதற்கும்,சுமூக நிலைக்கு மக்களின் அன்றாட வேளைகளை செய்து வருவதற்கும் பொறுப்புணர்வுடன் முஸ்லிம் மார்க்க தலைமைகளும், அரசியல் தலைமைகளும் செயற்பட்டுவருவதை காணக்கூடியதாக இருக்கிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மார்க்க,அரசில் தலைமைகளை இலக்கு வைத்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறு உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து,தாங்கள் சார்ந்த அரசியலுக்கும்,கொள்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இவ்வாறான நெருக்கடியான நிலைமையில் சமூகம் மாட்டிக் கொண்டு தவிக்கும் போது தங்களின் அஜந்தாக்களை சமூக வலைதளங்களினூடாக நிறைவேற்ற முற்படுவது கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.
குறிப்பாக அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சிலரால் அதிகம் விமர்சிக்கப்படுவதை நாம் காணலாம், இந்த சூழ்நிலையில் அவர் மேற்கொண்ட பணிகளை மறைத்தும்,மறந்தும், அவர் மீதுள்ள காழ்புணர்ச்சியை திணிக்க முற்படுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ரவூப் ஹக்கீம் என்ன செய்தார்?
ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் இடம் பெற்ற பின்னர் பல நெருக்குவாரங்களுக்கு முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்க நேர்ந்தது என்பதுடன் சில முஸ்லிம் அரசியல்வாதிகளூம் குற்றம் சாட்டப்பட்டு ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் குற்றவாளியாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் மீது பாரிய சமூக பொறுப்பு சுமத்தப்பட்டிருந்தது.
இப் பொறுப்பை உணர்ந்து இந்த அசாதாரண நிலைமைகளில் இருந்து முஸ்லிம் சமூகத்தை விடுவிப்பதுடன், போலி குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சில அரசியல்வாதிகளையும் (தன்னை எதிர்ப்பவர்களாக இருந்த போதும்) இந்த சந்தர்ப்பத்தில் அவைகளை மறந்து அவர்களை பாதுகாப்பதற்காகவும் பொறுமையாகவும்,நிதானமாகவும், மார்க்க தலைமைகளின் வழிகாட்டல்களுடன் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் பௌசி அவர்களின் தலைமையில் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.
முன்னெடுப்புகள் சில....
*உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குல் நடைபெற்ற பின்னர், அன்று (21) காலை கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வொன்றில்
உரையாற்றுகையில்...
தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள், நாட்டில் குழப்பத்தை, கலவரத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன சொந்த நோக்கங்களுக்காக நடாத்தப்பட்டுள்ள இத்தாக்குதலை கண்டிப்பது நமது தார்மீக பொறுப்பாகும்.என தனது கண்டனத்தை தெரிவித்தார்.
* சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பௌசி அவர்களின் தலைமையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை தலைவர் உற்பட ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு குண்டு தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தின் தலைமையான கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களை சந்தித்து தங்களின் அனுதாபங்களை தெரிவித்தது மட்டுமன்றி முஸ்லிம் சமூகத்திற்கும் இந்த தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனவும் தெளிவு படுத்தினார்.
*எமது நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் உயிர்தெழுந்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கடந்த மாதம் (24)ம் திகதி ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உரையாற்றும் போது தனது உரையில் "அரசியல் ரீதியாக ஒருவரையொருவர் கை நீட்டாமல், அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதிகளை இல்லாதொழிக்க முன்வர வேண்டும்" எனவும் குறிப்பிட்டார்.
*இத் தாக்குதல் தொடர்பாகவும்,முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் நெருக்கடி தொடர்பாகவும், இத் தாக்குதலுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் சம்பந்தமில்லை என்பதுடன் இத் தாக்குதலையும்,தாக்குதல்தாரிகளையும் முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கும், சர்வதேச ஊடகங்களுடாக விளக்கமளித்தார்.

& உயிர்தெழுந்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இந்திய தொலைக்காட்சியான புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியான ABC தொலைக்காட்சிக்கும் நேர்காணலை வழங்கினார்.
&ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு வழங்கி செவ்வியின் போது "பெரும்பாலான. முஸ்லிம் சமயத் தலைவர்கள் புர்கா அணியவேண்டாம் என்றுதான் கூறுகின்றனர். ஆனால், அதை சட்டத்தின் மூலம் திணிக்க முடியாது. யுத்த. காலத்தில் மரம் செடிகளை எரிப்பதற்கு கூட இஸ்லாம் அனுமதிக்கவில்லை" இவ்வாறு விடயங்களை தெளிவு படுத்தினார்.
*உள்நாட்டு ஊடகங்களிலும் பெரும்பான்மை மக்கள் மத்தில் சொல்லப்பட்ட குற்றச் சாட்டுகள், பல் வேறான சந்தகங்களுக்கும் விளக்கமளித்தார்.
& சிரச தொலைக்காட்சியில் "சட்டன" நேரடி நிகழ்வில் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இதன் போது ஆளுனர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிசாட் பதிவுதீன் இருவரையும் தீவிரவாத தாக்குதல்களுடன் இணைத்து கேட்டபோது தான் ஒரு சமூகத்தின் தலைவன்,பொறுப்புள்ள அமைச்சர் என்ற அடிப்படையில் அவர்கள் இவ்வாறான விடயங்களில் சம்பந்தப்பட்டிருக்கமாட்டார்கள் என்று பதிலளித்தார்.
&சுவர்ணவாகினி தொலைக்காட்சி "ரத்து இர" நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நிதானமாக பதிலளித்தார்.
&வசந்தம் தொலைக்காட்சியின் "அதிர்வு" நேரடி நிகழ்வில் கலந்து கொண்டு பல்வேறு சந்தேகங்களுக்கும்,கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளித்தார்.
*தற்போதைய சூழ்நிலையை விளக்கவும், பெரும்பான்மை மக்களின் சந்தேகங்களை களையவும், தவறான முறையில் முஸ்லிம்களை சில ஊடகங்கள் சித்தரிப்பதை கண்டித்தும்,தெளிவு படுத்தியும் ஊடக மாநாடுகளில் கலந்து கொண்டு மும்மொழிகளிலும் உரையாற்றினார். அத்தோடு பெரும்பான்மை மக்களுக்கு தெளிவை வழங்கும் பொருட்டு அபிவிருத்திக் குழு கூட்டங்களில் கலந்து கொண்டு, ஒரு சிறிய குழுவினர் மேற்கொண்டு வரும் படுகொலை கலாசாரத்தை முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம் என்பதை தெளிவு படுத்தினார்.
&அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ரவூப் ஹக்கீம் அவர்கள் "தேடுதல் நடவடிக்கைகளின்போது மக்களின் உணர்வுகளை மதித்து, ஊடகங்களை அங்கு அழைத்துச் செல்வதை பாதுகாப்புத் தரப்பினர் முற்றாக நிறுத்தவேண்டும். சில ஊடகங்கள் சிறிய விடயங்களையும் பெரிதுபடுத்தி காண்பிக்கின்றன என வேண்டுகோள் விடுத்தார். இதன் பின்னர் ஜனாதிபதியும் தேடுதல் நடவடிக்கையின் போது ஊடகங்களை அழைத்து செல்வதை தவிர்க்குமாறு கட்டளையிட்டார்.
&அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையில் ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு மும்மொழிகளிலும் ரவூப் ஹக்கீம் உரையாற்றினார் "முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாத்துடன் தொடர்புடையதாக சித்திரிப்பதையும் உடன் நிறுத்த வேண்டும்" என்ற கோரிக்கையும் முன்வைத்தார்.
& Capital ஊடக நேர்காணலின் போது "முஸ்லிம்ங்கள் அளவுக்கு அதிகமான விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டு அடிமைத்தனமாக அது மாறிவிடக் கூடாது" என்றும் பொறுப்புணர்வுடன் பதிலளித்தார்.

*அதே போன்று வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கு போது...
&உயிர்தெழுந்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாகவும்,இதில் முஸ்லிம் சமூகத்தை இணைத்து மேற்கொள்ளப்படும் போலி பிரச்சாரங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தினார்.
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் அலய்னா பீ. ரெப்லிட்ஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர ரவூப் ஹக்கீமை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து அண்மைய தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின் நிலைமை குறித்தும் இதர முக்கிய விடயங்கள் குறித்துமான கலந்துரையாடலின் போதும் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்குவதே இன்றைய அவசரத் தேவை என்பதை தூதுவரிடம் அமைச்சர் தெளிவு படுத்தினார்.
*நாட்டின் அதி உயர் சபையான பாராளுமன்றத்திலும் பல சந்தர்ப்பங்களில் தற்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்குவாரங்கள் தொடர்பாகவும் உரையாற்றியுள்ளார்.
அவ் உரையில் "முஸ்லிம்களின் கலாச்சார விடயங்களில் தேவையில்லாத தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ஆடை அணிவதை நிறுத்தியுள்ள நிலையில் தலையை மறைத்து ஏனைய ஆடைகளை அணிந்து செல்லும்போது அதற்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவை நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
*அதே போன்று பயங்கரவாதத்துடன் தொடர்பு படாது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிப்பது தொடர்பான செயற்பாடுகளையும் தனது தலைமையில் கட்சியின் சட்டத்தரணிகளை உள்ளடக்கியதாக குழு ஒன்றை நியமித்து அவை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.
*பெண்கள் முகத்தை மறைத்து ஆடை அணிவதை தடுக்கும் சுற்று நிருபம் வெளிவந்த போது முஸ்லிம் பெண்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கினார்கள், அவர்களுக்கு உதவி செய்வதற்காக கட்சி தலைமையகத்தில் உள்ள கட்சியின் முக்கியஸ்தர்களைக் கொண்ட குழு ஒன்றை இவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க பணித்தார். அத் தோடு உயர் கல்வி துறையில் இவ்வாறான அசௌகரியங்களை முஸ்லிம் பெண்கள் எதிர் நோக்குவதை தவிர்ப்பதற்கு சுற்று நிருபம் ஒன்றை வெளியிடச் செய்தார், பின்னர் இந்த சுற்று நிருபத்தை பொதுவாக எல்லா துறைகளிலும் பயன்படுத்துவதற்கான ஆலோசனையை ஜனாதிபதி விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
*அதே போல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஜனாதிபதியினதும், பிரதமரினதும் கவனத்திற்கு கொண்டுவந்து இருக்கிறார். இவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறான சூழ்நிலையில் சமூகம் எதிர் நோக்கும் சவால்களை சாணக்கியமாக வெற்றி கொள்வதற்கான நகர்வுகளை நகர்த்திக் கொண்டிருக்கும் போது மே மாதம் 13ம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒரு இனவாத குழுவால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இவ் வன்முறையில் முஸ்லிம்கள் உயிர்,பொருளாதார இழப்புகளை சந்திக்க நேர்ந்தது.
இவை தொடர்பான முன்னெடுப்பு சில..
.* இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், வன்முறைகள் மேலும் அதிகரிக்கப்படாது இருப்பதற்கும்,ஏனைய பிரதேசங்களுக்கும் பரவிச் செல்லாது தடுப்பதற்குமான நடவடிக்கைகளை இரவு,பகல் பாராது ரவூப் ஹக்கீம் அவர்கள் உயர் மட்டங்களின் கவனத்திற்கு கொண்டுவந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான BMICH இல் ஒப்பரேசன் அறை ஒன்றை ஏற்பாடு செய்து பிரதமரையும் அழைத்து வந்து நிலைமைகளை கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார் இதனால் வன்முறை பரவலாக ஏற்படுவது தடுக்கப்பட்டது.
* மறுநாள்(14) பிரதமரை அழைத்துக் கொண்டு குருநாகல் மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான ஹெட்டிப்பொல, கொட்டம்பிட்டிய உள்ளிட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வை இட்டார். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களான பண்டாரகொஸ்வத்த, மடிகே, அனுக்கன, எஹட்டுமுல்ல, தோரகொடுவ, கிணியன, பூவல்ல, அஸனாகொடுவ, கல்ஹினியாகடுவ போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்து இனவாத கும்பல்களின் தாக்குதல்களுக்குள்ளான வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை நேரில் சென்று பார்வை இட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடினார். வன்செயல்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுத்தார், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி,பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.
*இவ்வாறான முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளையும் தெளிவு படுத்தினார்.
&இனவாத வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட புத்தளம், கொட்டராமுல்ல பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்கிருந்தவாறே துருக்கி TRT WORLD செய்தி சேவைக்கு SKYPE மூலம் நேர்காணலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கத்.
எனவே இவ்வாறு தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் கட்சி அரசியலுக்கு அப்பால் சமூகத்தின் அரசியல் தலைவன் என்ற அடிப்படையில் ஏனையவர்களையும் இணைத்துக் கொண்டு, மார்க்க தலைமைகளின் வழிகாட்டுதலுடன் தனது பணியை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் போது, நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் மாறாக இவ்வாறு பணிகளை முன்னெடுப்பவர்களை அரசியல் காரணங்களுக்காகவும், அவர்கள் மீது கொண்ட காழ்ப்புணர்வுகளுக்காகவும் விமர்சிப்பது நியாயமில்லை.
மாறாக இன்றைய சூழ் நிலையில் நாம் அரசியல் தலைமைத்துவங்களுக்காக நாம் உறுதுணையாக இருக்கவேண்டுமே தவிர, சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்களாக ஒரு போதும் இருக்கக்கூடாது.