முஸ்லிம் சமூகத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவே இராஜினாமா செய்தோம்


- சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை-
ஹஸ்பர் ஏ ஹலீம்-
முஸ்லிம் சமூகத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் எமது சமூகத்துக்காகவே அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவியை திறந்தோம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (06) கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சீர்குழைந்து வன்முறைகளை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இதனால் எமது சமூகம் அச்ச சூழ் நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்

சட்டம் ஒழுங்கை அமைச்சரவைக்கு வழங்குங்கள் இதனை ஜனாதிபதிக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.முஸ்லிம்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏனைய உரிமைகள், பாதுகாப்பு விடயங்களுக்கும் பங்களிப்பு செய்தவர்கள் . ஒரு மாத கால காலக்கெடு அரசாங்கத்துக்கு படிப்பனையாக அமைந்து நிரந்தர தீர்வொன்றை பெற்று சமூகத்துக்கு உங்கள் அரசு மீது உள்ள நம்பிக்கையை இதன் மூலம் வெளிப்படுத்துங்கள் மாறாக சட்டத்தையும் ஒழுங்கையும் யாராலும் கையில் எடுக்க அனுமதிக்காதீர்கள் .

பௌத்த தர்மத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வண்ணம் சிலர் இன வன் முறைகளில் ஈடுபடுகிறார்கள் ஞானசாரர் தலைமையில் இரு பௌத்த தேரர்கள் கெக்கிராவையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை இணைத்து அப்பகுதியில் உள்ள பள்ளிவாயல்களை உடைக்க முற்பட்டார்கள் இது போன்று அத்துரலிய தேரர் உண்மையான சட்டம், ஒழுங்கும் நிலை நாட்டப்படுவதாக இருந்தால் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னாலே உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும் தலதாமாளிகைக்கு செல்ல வேண்டியதில்லை .
அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் புனிதமான நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திலும் கூட இவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கிறேன் .
சமூகத்தின் எதிர்பார்ப்பு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு பெரும் பயத்துடன் வாழ்ந்து வரும் இன்றைய கால கட்டமாக மாறியிருக்கிறது இந்த நாட்டு பெரும்பான்மை சமூகத்துக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன் 1000 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் அன்றைய மன்னர் ஆட்சிக் காலத்திலும் ஆங்கிலேயர் ஒல்லாந்தர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி காலத்திலும் வாழ்ந்து வருகிறார்கள் அன்று தொடக்கம் இன்றுவரையும் நாட்டின் பாதுகாப்பு பொருளாதார வளர்ச்சி போன்றவற்றுக்கு தோல் கொடுத்தவர்கள் சட்டமும் ஒழுங்கும் என்பது எவ்வாறு அமையப் பெறவேண்டும் யாப்பு விதிகள் எவ்வாறு சொல்லப்படுகிறது ஜனாதிபதி பிரதமர் முறைகள் எவ்வாறு சொல்கிறது சட்டம் ஒழுங்கு யாரிடம் காணப்படவேண்டும் போன்ற விடயங்களை மறந்து செயற்படுவதனால் பாரிய சீர்குழைவுகள் அங்கு காணப்படுகிறது இதனை அமைச்சரவைக்கு வழங்குங்கள் என இந்த கோரிக்கையையும் ஜனாதிபதிக்கு ஒரு செய்தியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

1983 ஏற்பட்ட கலவரம் போன்று மாற்றி விடாதீர்கள் இன வாதங்களை கக்கும் சில மூன்று ஊடகங்கள் காணப்படுகிறது இவ்வாறான ஊடகங்களை எமது சமூகம் வெறுக்கிறது இனவாதத்தையும் மதவாத்தையும் நாங்களும் எம் சார்ந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை 21 க்குப் பின்னர் பல்வேறு தேடுதல் நடவடிக்கைகள் பள்ளிவாயலிலும் படையினர்களால் முன்னெடுக்கப்பட்டது அங்கு ஆயுதங்களை மீட்கவும் இல்லை இதனை ஊடகங்களே திரிவுபடுத்திக் காட்டியது என மேலும் தனது ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -