அமைச்சர்களான மங்கள, ராஜித, சத்துர ஆகியோருக்கு விகாரைக்குச் செல்லத் தடை

கா சங்கத்தினரைத் தரக் குறைவாக கருதும் வகையில் அறிப்புச் செய்த அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் சத்துர சேனாரத்ன ஆகியோருக்கு கம்பஹா பிரதேசத்திலுள்ள எந்தவொரு விகாரையிலும் வழிபாட்டில் ஈடுபட அனுமதி வழங்காதிருக்க கம்பஹா சாசன பாதுகாப்பு சபையின் விகாராதிபதி சங்கத்தினால் இன்று (04) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கம்பஹா சாம விகாரையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் ஏகமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நாட்டிலுள்ள சகல இனங்களும், ஒற்றுமையுடன் ஏற்றுக் கொள்ள கூடியதும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதுமான பொதுவான சட்ட திட்டங்கள் பலவற்றை நாட்டில் செயற்படுத்த தேவையான நடைமுறைகள் குறித்து இக்கூட்டத்தின் போது ஆராயப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -