பிரதேச மின் வழங்கல் தொடர்பில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், பிரதேசத்தில் மின் வழங்கலில் இடையூறுகள் ஏதும் ஏற்படாத வகையிலும் எதிர்காலத்தில் ஏற்படும் மின்சார தேவையை சமாளிக்கும் வகையிலும் விபத்துக்களைத் தடுக்கும் பொருட்டு திட்டமிட்ட அடிப்படையில் கம்பிகளுக்குப் பதிலாக வயர்களை மாற்றும் பணிகளிலும் கவனத்தைச் செலுத்தி வருகிறார்.
மிக நீண்ட காலமாக சாய்ந்தமருதில் மின் பாவனையாளர் சேவை நிலையம் ஒன்றை அமைத்துத் தருமாறு பல்வேறு கோரிக்கைகள் இருந்த போதிலும் கடந்தகாலங்களில் குறித்த கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டிருந்தன.
தன்னுடைய அயராத முயச்சியின் காரணமாக கல்முனை மின்சார சபைக்காக பாரிய கட்டிடத்தொகுதி ஒன்றைக் கொண்டுவந்து அதனை நிர்மாணித்து வெற்றிகண்ட பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், அந்த வரிசையிலேயே சாய்ந்தமருதுக்கான மின் பாவனையாளர் சேவை நிலையம்த்தையும் நிறுவி பாவனையார்களின் பாவனைக்கு விட்டுள்ளார்.
கல்முனைப் பிராந்திய மின் பாவனையாளர் எல்லைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களையும் சம பார்வையோடு நோக்கி செயற்படும் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் பாராட்டப்படவேண்டியவர். அவரது சேவைக்காலத்துக்குள் அவரால் ஆற்றப்படக்கூடிய அனைத்துப் பணிகளையும் பிரதேச மக்கள் பெறுவர் என்பது திண்ணம்.