ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமார சிறிசேன மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகத்தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏஎம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.இதன்போது ஸ்ரீ லங்கா டெலிகொம்மினுடைய பிரதம நிறைவேற்று அதிகாரி,பணிப்பாளர்கள்,திணைக்களத் தலைவர்கள்,ஸ்ரீ லங்கா டெலிகொம் பல்கலைக்கழகத்தின் தலைவர்,சிரேஸ்ட பேராசிரியர்கள்,மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப்பணிப்பாளர் அஹமட் ஹிராஸ்,மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் தங்கள்ள,பேராசியர் தென்னக்கோன்,தகவல் தொழிநுட்ப ஆலோசகர் கலாநிதி ஞானசார ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கும் ஸ்ரீ லங்கா டெலிகொம் பல்கலைக்கழகத்திற்குமிடையில் ஒரு உறவை ஏற்படுத்துவது பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கான பயிற்சி வகுப்புக்களை மேற்கொள்வது ஸ்ரீலங்கா டெலிகொம் பல்கலைக்கழகத்தின் பாடங்ளை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைப்பது ஸ்ரீ லங்கா டெலிகொம்மினால் வழங்கக்கூடிய சகல சேவைகளையும் டெலி கொமினிகேசன்,வைபை மற்றும் ஏனைய சேவைகள் பி.எம்.டி.சிக்ஸ் உட்பட சகல சேவைகளையும் வழங்குவது போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. ஸ்ரீலங்கா டெலிகொம் பிரதம நிறைவேற்று அதிகாரி, பணிப்பாளர்கள்,மொபிட்டல் பிராந்திய முகாமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இதன்போது பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் பல்கலைக்கழகத்திற்கும் ஸ்ரீ லங்கா டெலிகொம்முக்குமிடையில் உடன்பாடு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்