நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா-
தெம்பிலிகலை கிராமத்துக்கு செல்லும் பாதையை புனரமைத்து தரக்கோரி கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி − கம்பளை வீதியினை மறித்து ஆர்பாட்டமொன்று 03.04.2019 காலை இடம்பெற்றது
கண்டி மாவட்டம் கங்கேகல பிரதேசசபைக்குட்பட்ட
நாவலப்பிட்டி கம்பளை பிரதான வீதியில் கிளையாக தெம்பிலிகலை கிராமத்திற்கு செல்லும் 10 கிலோ மீட்டர் தூரத்தை கொண்ட வல்லகொட வீதியை புனரமைத்து தரக்கோரி கிராமவாசிகளால் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் குறித்த வீதி நீண்ட காலமாக செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுவதாக தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள் கண்டி மாட்ட அரசியல்வாதிகள் கண்டுகொள்வதில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்
ஆர்பாட்டத்தினால் கம்பளை நாலப்பிட்டி வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் தற்காளிகமாக தொலஷ்பாகை, உலபனை,மாவெலி, பாதையை பயன்பபடுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்,