தோலின்றிப் பிறந்த அதிசய குழந்தையைக் காப்பாற்ற போராடும் மருத்துவர்கள்

மெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் உடலின் பெரும்பாலான பாகங்களில் தோல் இன்றி அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இக் குழந்தையை காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

கருவில் குழந்தையின் எடையும் இதயத் துடிப்பும் குறைவாக இருந்ததால் பிரிசில்லா மால்டொனாடோ ((Priscilla Maldonado)) என்ற பெண்ணுக்கு அதி கவனப் பிரிவில் பிரசவம் நடைபெற்றது.

குழந்தையின் முதல் அழுகுரல் கேட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி குழந்தையை பார்த்தபோது அதிர்ச்சியாக மாறியதாகக் கூறுகிறார் பிரிசில்லா. குழந்தையின் தலை, காலின் சில பகுதிகள் தவிர உடல் முழுதும் தோலே இல்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

மரபணுக் குறைபாடு உள்ளிட்டவற்றால் வெகு அரிதாக இதுபோன்ற குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பதுண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -