அரசியலின் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக இளைஞர்களே விளங்குகின்றனர். -காதர் மஸ்தான்


விளையாட்டுகள் இளைஞர்களின் உடல் உள வலிமைகளுக்கு அடிகோலும் அதே நேரம் ஆரோக்கியமிக்க சிந்தனைமிக்க சமூகத்தை உருவாக்குகின்றது.

இவ்வாறான இளைஞர்களே
சர்வதேச அரசியலின் போக்கை தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

இன்று வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செக்கடிப்புலவு கிராமத்தில் இடம்பெற்ற தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே இந்த தகவல்களை தெரிவித்தார்.

காதர் மஸ்தான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில்
தெரிவு செய்யப்பட்ட முப்பத்தெட்டு விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கு சுமார் பத்து இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்திருந்தார்.

அதன் முதல் கட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நிறைவடைந்ததை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட கழகங்களான
நிவ்வன் விளையாட்டுக் கழகம்,ஆதவன் விளையாட்டுக் கழகம்,சூரியன் விளையாட்டுக் கழகம்,பூவரசு விளையாட்டுக் கழகம் மற்றும் ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றிற்கு விளையாட்டு உபகரணங்கள் இன்று மேற்படி வவுனியா செக்கடிப்புலவு கிராமத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது...

இனம், மதம், அரசியல் கட்சிகள் என்ற எல்லைகளுக்கு அப்பால் நின்று மனிதநேயமிக்க சேவைகளை நாம் ஆற்றிவருகிறோம் என்பதை மனச்சாட்சியுள்ள எவரும் மறுதலித்து விட முடியாது.

ஏழை மக்களின் வாழ்வு வளம்பெற ஊர் ஊராக குடும்ப ரீதியான தகவல்களை பெறுவதற்கு நாங்கள் சிந்தித்திருக்கிறோம்.

கடந்த எங்களது அரசாங்கத்தில் எமது மக்களுக்காக நாங்கள் 250 மில்லியன் ரூபாய்களை மக்களிடம் அபிவிருத்திகளுக்காக கொண்டு வந்த போது அதனை தடுத்து நிறுத்தி இன்புற்றவர்களையும் எங்களது அரசியல் களத்தில் நாங்கள் சந்திக்கத்தான் செய்தோம்.எல்லா வகையான சதியாட்டங்களையும் முறியடித்து எங்களது பயணத்தை தொடர்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் வவுனியா தமிழ்பிரிவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரதி தவிசாளருமான திரு.மகேந்திரன் செக்கடிப்புலவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேச சபை வேட்பாளர்.திரு கஜன் ஆசிரியர் விளையாட்டு கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -