கறைபடிந்த வரலாறு


இலங்கை முஸ்லிம்களின் வைர வரிகளால் வரையப்பட்டிருந்த நீண்டகால வரலாற்றில் கடந்த 21.04.2019 ம் திகதி உயிர்த்த ஞாயிரன்று முஸ்லிம் பெயர்தாங்கிகளால் அரங்கேற்றப்பட்ட ஒரு மிருகத்தனமான கொடூரச் செயலின் காரணமாக மறுக்கவோ மறைக்கவோ மறக்கவோ மன்னிக்கவோ முடியாத மிகவும் மோசமான கறைபடிந்ததொரு வரலாறு பதியப்படுகின்றது.

இந்த பெயர்தாங்கிகளின் மிலேச்சத்தனமான பாசிச செயலுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதனைத் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த ஈனச்செயலினை வண்மையாகக் கண்டிக்கின்றோம்.
இப்படியான தீவிரவாத பயங்கரவாதச் செயலினை ஒரு போதும் இஸ்லாம் அனுமதித்தது கிடையாது. 
இப்படியான செயல்களில் ஈடுபடுவோரை இஸ்லாம் ஒருபோதும் ஒரு முஸ்லிமாக ஏற்றுக் கொள்வதுமில்லை. முஸ்லிம் பெற்றார்களுக்கு அல்லது முஸ்லிம் சமுகத்தில் பிறந்ததனாலோ அல்லது இஸ்லாமிய பெயரை வைப்பதனாலோ ஒருவன் முஸ்லிமாக முடியாது. முஸ்லிம் அல்லாத பெற்றார்களுக்கு அல்லது முஸ்லிம் அல்லாத சமுகத்தில் பிறந்த போதிலும் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட பெயரை வைத்துக் கொண்ட போதிலும் ஒருவன் இஸ்லாமிய கொள்கையினை ஏற்றுக்கொண்டு இஸ்லாமிய வரையறைக்குள் தனது வாழ்க்கையினை அமைத்துக் கொள்கின்றானோ அவன் ஒரு முஸ்லிம் ஆவான் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைபாடு.

இத்தகைய மனிதாபிமானமற்ற மிருகத்தனமான அரக்கர்களுக்கு இஸ்லாம் கூறுகின்ற மிகக்கடுமையான தண்டனையினை வழங்குதல் வேண்டும். இப்படியான அயோக்கியர்களுக்கு இஸ்லாம் கூறுகின்ற தண்டனை பின்வருமாறு அமையும்.

அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல் அல்லது தூக்கிலிடப்படுதல் அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல் அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்;. மறுமையில் அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் : 5:33)
இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும் இஸ்லாமிய அரசால் நடாத்தப்படுகின்ற புனிதப் போராகிய யுத்த நேரத்தில்கூட மதஸ்தலங்கள் மதத்தலைவர்கள் வயோதிபர்கள் பெண்கள் சிறுவர்கள் விளை நிலங்கள் கனி மற்றும் நிழல் தரும் மரங்கள் ஆகியவற்றுக்குக்கூட ஒரு சிறு பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று வழிகாட்டுகின்ற மகத்தான மார்க்கம்தான் இஸ்லாம்.
அத்துடன் இவ்வாறன புனிதப் போரைக்கூட ஒரு தனிமனிதனோää குழுவோ அல்லது இயக்கமோ தனது கையில் எடுத்துக் கொள்ள இஸ்லாம் அனுமதியழிப்பது கிடையாது அது ஒரு இஸ்லாமிய அரசின் பொறுப்பாகும். இஸ்லாமிய அரசொன்று இல்லாத போது யார் மீதும் புனிதப் போர் புரிய இஸ்லாம் அனுமதியழிப்பது கிடையாது.
இந்நிலையில் இப்படியான மிக கீழ்தரமான செயல்களை இவர்கள் இயக்கரீதியாக செய்வதற்கான பிரதான காரணம் நம் சமூகத்தின் ஆண்மீக மற்றும் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனமேயாகும் என்றால் அது மிகையாகாது. மேற்படி நமது தலைமைகள் இரண்டும் நம் சமுகத்தை சரியான முறையில் வழிநடாத்தி இருந்தால் இப்படியான இழிநிலைக்கு நம் சமுகம் தள்ளப்பட்டிருக்காது.
எனவே நமது ஆண்மீக மற்றும் அரசியல் தலைமைகள் நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்தல் மிகவும் அவசியமாகும். அத்துடன் நமது தஃவா இயக்கங்கள் தங்களது பணியை தஃவாவுடனும் சமுகப்பணிகளுடனும் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்வதும் மிகவும் அவசியமாகும்.
அடுத்ததாக இஸ்லாத்தின் பெயரை வைத்துக் கொண்டு யாரெல்லாம் இப்படியான தீவிரவாத செயலில் ஈடுபடுகின்றார்களோ அப்படிப்பட்வர்களை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு நம்மைச் சாரும் என்பதில் சந்தேகம் கிடையாது.
இப்படிப்பட்ட அயோக்கியர்களின் அரக்கத்தனமான செயல்களின் காரணமாக நம் வருங்கால சந்ததியினர்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது யாரும் அறிந்ததே.
ஆகவே நம் வருங்கால சந்ததியினர்களின் வளமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இயக்கவெறிபிடித்த இனவெறியர்களை இனங்கண்டு அவர்களை நம் சமூகத்திலிருந்து வெயியேற்றுவதன் மூலம் நம் சமூகக்கட்டமைப்பை தூய்மைப்படுத்திக் கொள்ள முன்வருவோமாக.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்-ஜே.பி.
இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -