திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிரிஸ்டியன் நோயல் இமானுவேல் ஆண்டகை அவர்களை அன்னாரின் ஆயர் இல்லத்தில் வைத்து
திருகோணமலை மாவட்ட ஜம்யத்துல் உலமா சபை,
திருகோணமலை வர்த்தக சங்க சம்மேளனம்,
திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் ஆகியன சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.
.
திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவர் ஜனாப் வலீத் ஹாஜி கருத்து தெரிவிக்கயில்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை சகல பள்ளிவாசல்களிலும் ஜூம்மா பிரசங்கத்தின் போது தேசிய நல்லிணக்கம், சமூக ஒற்றுமை தொடர்பாக முன்னிலைப்படுத்தி பேச முடிவெடுத்துள்ளதாகவும், அனைத்து பள்ளிவாசல்களிலும் விசேட துவா பிரார்தனை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
திருகோணமலை மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் கருத்து தெரிவிக்கையில் உயிர் நீத்த உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு இன்றைய தினம் கடைகள் அனைத்தையும் மூடப்பட்டுள்ளதாகவும் எதிர் வரும் நாட்களில் தங்களால் இயலுமான உதவிகளை பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கருத்து தெரிவிக்கையில் இத்தகைய சந்தர்ப்பங்களில் தான் நாங்கள் அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் எனவும். சமயத் தலைவர்கள் ஆகிய நாங்கள் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் எனவும், இதனை சில தீய சக்திகள் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி விடக்கூடாது எனவும், அத்துடன் விசேட ஊடக அறிக்கை ஒன்றினை ஓரிரு தினங்களில் வெளியிடஉள்ளதாகவும் மதிப்புக்குறிய ஆண்டகை தெரிவித்தார்.

