அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் போதைப்பொருள் திட்டத்தவிசாளர் எஸ்.தஸ்தக்கீர்நெறிப்படுத்தலின் கீழ் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் சஹிட் எம்.ரிஸ்மிதலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசியத் தலைவர்தேசபந்து எம்.என்.எம்.நபீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இறுதிநிகழ்வின் போது சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
இச்செயலமர்வில் இருநாட்களும் போதைப்பொருள் பாவனையின் தாக்கம், இதைத்தடுப்பதற்கானவழிவகைகள்,விழிப்பூட்டல் செயலமர்வுகள்,மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வழிமுறைகள்தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,செயன்முறைப்படுத்தப்பட வேண்டிய நடைமுறைகள்தொடர்பான பல்வேறு விளக்கங்கள் இங்கு கலந்து கொண்ட துறைசார்ந்த வளவாளர்களால் முன்வைக்கப்பட்டன.
இச்செயலமர்விற்கு தேசிய ரீதியாகக் கிடைக்கப்பெற்ற 160 துறைசார்ந்தவர்களின் விண்ணப்பங்களிலிருந்து 47பேர் இச்செயலமர்விற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.அதில் 11 பேர் பெண்களுமாவர்.
இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பயிற்சி பெற்றவர்களுக்குஜனாதிபதி செயலணிக்குழுவினால் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பயிற்றுவிப்பாளராகஅவரவர் பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு உள்வாங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இறுதி நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் பதவி வழி உத்தியோகத்தர்கள் எனப்பலரும்கலந்து கொண்டனர்.


