அபினந்தனை வழியனுப்பிய பாடல்
++++++++++++++++++++
Mohamed Nizous
போனால் போகட்டும் போடா- இந்தப்
பூமியில் அமைதி விரும்புவோர் நாமடா
வந்தார் கொல்ல, விழுந்தார் உள்ளே
வசமாய் மாட்டிக் கைதானார்
வந்ததவர் எதிரி என்றாலும் இங்கே
எந்தக் கொடுமையும் தரமாட்டோம்.
போடரைத் தாண்டி வருவோரை
ஓட அடிக்க வீரமுண்டு- ஆனால்
எமக்குள் ஈரமுண்டு
போனால் போகட்டும் போடா
குஜராத்தில் கொன்றவன் ஆள்கின்றான்- அவன்
கொள்கையை நமக்காய் விடுவானா?
உறவை இழந்து அழும் காஷ்மீர் அதை
ஒரு துளியேனும் நினைப்பானா?
தாக்குதல் நடத்த உள் வந்தால்
கோட்டைத் தாண்ட விடமாட்டோம்-எம்
கோட்டையின் வலிமை காட்டி நிற்போம்
போனால் போகட்டும் போடா
எதிரணி மிரள எறிந்தேன் பந்து
அதிரடி ஆட்டம் அறிவேன் நான்
பதிலடி கொடுப்பதில் பல வகை உண்டு
அதிலொரு வகைதான் மன்னித்தல்
நமக்கும் மேலே பல நாடு
சுமக்கும் யுத்தம் பெருங் கேடு
உமக்கும் எமக்கும் பகை வேண்டாம்
போனால் போகட்டும் போடா