இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் திருகோணமலை மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிபாளருக்கு இன்று பகல் Fax மூலம் மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கன்றது.
இதற்கான முயற்சியை தொடர்ச்சியாக கடந்த வாரத்திலுருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்கள் எடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முயற்சியின்போது கடந்த இரண்டு நாட்களாக கிண்ணியாவைச் சேர்ந்த மீனவர்களும் சகோதரர் பாயிஸ் (Mercyful Kinniyans) மற்றும் றபீஸ் அவர்களுடைய தலைமையின் கீழ் கலந்து கொண்டனர்.
இந்த முயற்சியில் விவசாய, கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஹரிஸ்ஸன்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ திலிப் வெதஆரச்சி, அமைச்சின் மேலதிக செயலாளர் விக்ரமசிங்கே, மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கினிகே பிரசன்ன, பதில் பணிப்பாளர் நாயகம் கஹவத்த, முகாமைத்துவ பணிப்பாளர் மார்கஸ் ஆகியோரின் ஒத்துழைப்பும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
ரிஹ்மி ஹக்கீம்
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம்