பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தினை எதிர்த்து ஏறாவூர் வாவிக்கரை பூங்காவில் நேற்று மாலை 20.03.2019 ஏறாவூர் வாசிப்பு வட்ட நண்பர்களால் கையளுத்து வேட்டை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது..
மேற்படி சட்டமூலத்தின் சிறுபான்மை இனத்துக்கு எதிராகவும் சமூக மட்டத்தில் இயங்கும் பொது அமைப்புக்களுக்கும் பாதகமாகவும் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
இச்சட்ட மூலம் சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமாகவும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு இக்கையழுத்து வேட்டை இடம்பெற்று வருகின்றது.
இக்கையழுத்து வேட்டையில் சுமார் 500க்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது ஆதரவை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமூகத்தின் நலன்சார்ந்த இத்திட்டத்தினை மேற்கொண்டு இச்சட்ட மூலம் சட்டமாக்கப்படக்கூடாது என்பதற்காக எமது பிரதேசத்தில் எமது சமூகத்தை பெரும்பான்மையாக பிரதி நிதித்துவப்படுத்தி ஏறாவூர் நகரசபை உள்ளதால் குறித்த பிரேரனையை நிறைவேற்றித்தருமாரு மஹஜர் ஒன்றை கையளிக்க உள்ளனர்.
இத்திட்டத்தினை ஊரின் பல பொது அமைப்புக்களுக்கு மத்தியில் முன்நின்று செயல்படுத்திவரும் வாசிப்பு வட்ட நண்பர்களுக்கு பொதுமக்கள் பல ஆதரவினை வழங்கிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.