நஞ்சற்ற உணவுகள்மூலம் நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

ஹெலசுவய நிறுவனத்தின் ஏற்பாட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கான நஞ்சற்ற பாரம்பரிய உணவுகள் மூலம் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை கேட்போர் கூடத்தில் இம்மாதம் 18ஆம் திகதி இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், ஹெலசுவய நிறுவனத்தின் ஸ்தாபகர் திருமதி டாக்டர் பிரியந்தா திஸ்ஸநாயக்க, வைத்தியர்கள், உயர் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஹெலசுவய நிறுவனத்தின் வைத்தியர் குழுவினால் நஞ்சற்ற பாரம்பரிய உணவுகள் மூலம் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -