மீன்பிடி,பண்ணைத்தொழில்,விவசாய,தோட்டச் செய்கை ஆரம்பக்கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உதவித்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வு


ஆதிப் அஹமட்-
மூக வலுவூட்டல் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூர்த்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் விவசாயம் மற்றும் நன்னீர் மீன்பிடி,இறால் தொழில் முயற்சி மேம்பாட்டுத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கௌரவ செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு கச்சேரி ஊடாக செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்படி நடவடிக்கை மூலம் மீன்பிடித்தொழில் சார்புடையவர்கள்,பண்ணைத்தொழில் முயற்சியாளர்கள் ,தோட்டச் செய்கையாளர்கள்,நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பில் நாட்டம் உள்ளோர் மற்றும் இதர ஆரம்ப கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு அரசாங்கம் இலவசமாக மாணிய அடிப்படையில் நிதி உதவி செய்யவுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரசதேசங்களிலுள்ள முயற்சியாளர்களுக்கும் இது தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வு நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் ஏற்பாட்டில் பின்வரும் விபரப்படி நடைபெறவுள்ளது.

• இடம் - அல்மனார் கல்லூரி கேட்போர் கூடம்
• காலம் - 16-03-2019 சனிக்கிழமைஇமாலை 7.45 மணி

இவ்விடயம் தொடர்பாக ஆர்வமுடையவர்கள் மேற்படி நிகழ்வில் கலந்து பயன் பெறுமாறு அன்பாக அழைப்பு விடுக்கின்றோம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -