நியுஸிலாந்தில் பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - வன்மையாக கண்டிக்கிறது சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ)

எஸ்.அஷ்ரப்கான்-
நியுஸிலாந்தில் பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - வன்மையாக கண்டிப்பதாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் இன்று (15) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசு இந்த மிலேச்சத்தனமான காரியத்தை கண்டிப்பதுடன், இதில் ஈடுபட்டவர்கள், தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான முறையில் தண்டனையை அமுல் படுத்துவதற்கு நியூசிலாந்து அரசை வலியுறுத்த வேண்டும்
நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள டீன் அவென்யூ அடுத்ததாக லின்வூட் அவென்யூ பகுதியில் உள்ள இரு மஸ்ஜிதுகளில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களை தாக்கியுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்
ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மஸ்ஜித் ஒன்று உள்ளது. இன்று வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகை நேரம் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நண்பகல் தொழுகை நடந்தது. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இயந்திர துப்பாக்கியுடன் , மிலிட்டரி உடை அணிந்து வந்த ஒருவன் அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். சுமார் 15 நிமிடம் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தான். இதையடுத்து பலர் ஓடி உயிர் தப்பினர். இதிலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த உறுதியாக சொல்லமுடியாவிட்டாலும் குறைந்தது 45 பேர் உயிரிழந்திருக்கலாமென தற்போது தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. ’’இன்னும் இங்கு ஆபத்து ஓய்ந்துவிடவில்லை’’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் கூறுகையில்,

"நியூஸிலாந்தில் இதற்கு முன் இதுபோன்ற மோசமான வன்முறைச் செயல்கள் நடந்ததில்லை. அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் இன்று நடந்த வன்முறைச் செயலை நியூஸிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன்” என்று கூறியுள்ளார்.
மக்கள் சுதந்திரமாக தங்கள் வழிபாட்டை நடத்தி வந்த இடத்தில், பாதுகாப்பாக இருந்த இடத்தில் இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்த செயலைச் செய்தவர்கள் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளார்கள். இதுபோன்ற செயலுக்கு நியூஸிலாந்து சமூகத்தில் இடமில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மிலேச்சத்தனமான கொடூர செயல்பாட்டை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதுடன், இதில் ஈடுபட்டவர்கள், தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான முறையில் தண்டனையை அமல் படுத்துவதுடன், இது போன்ற காரியங்கள் இனியும் நடைபெறாமல் உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கை அரசு இந்த மிலேச்சத்தனமான காரியத்தை கண்டிப்பதுடன், இதில் ஈடுபட்டவர்கள், தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான முறையில் தண்டனையை அமுல் படுத்துவதற்கு நியூசிலாந்து அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் வேண்டிக்கொள்கிறது.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான். (அல்குர்ஆன் 9:32)







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -