உலகளாவிய சமூகப்பணி தினத்தை முன்னிட்டு நடைபவனி


நுஸ்கி முக்தார்-லகளாவிய சமூகப்பணி தினம் மார்ச் மாதம் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு இலங்கையிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. "மனித உறவுகளின் முக்கியத்துவத்தை ஊக்குவித்தல்"எனும் தொனிப்பொருளில் இவ்வருட சமூகப்பணி தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது.

அதன்படி, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் இலங்கை தொழில்சார் சமூகப்பணியாளர்களின் சங்கம் ஆகியன இணைந்து எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை நடைபவனி மற்றும் கருத்துரை நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு விஹாரமஹா தேவி பூங்காவுக்கு அருகில் ஆரம்பமாகும் நடைபவனி காலை 11 மணிக்கு இலங்கை மன்றக்கல்லூரியில் நிறைவடையும் அதனை தொடர்ந்து கருத்துரை மற்றும் ஊடக சந்திப்பு இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயா கமகே பிரதம அதிதியாக கலந்துகொள்வதுடன், தொழில்சார் சமூக்கப்பணியாளர்கள், சமூகப்பணி பட்டதாரி மாணவர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -