மருதமுனை ஜமீல் எழுதிய “ஓவியத்திருந்து வெளியேறும் நிறம்”கவிதை நூல் வெளியீடு விழா சனிக்கிழமை(16-03-2019)காலை 9.30 மணிக்கு மருதமுனை மருதூர்க்கனி நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர் சி.மௌனகுரு கலந்து கொள்கின்றார். கௌரவ அதிதிகளாக ஓய்வு நிலை ஆசிரியர் எஸ்.எம்.அபுவக்கர்,அதிபர் ஏ.குனுக்கத்துல்லா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
விஷேட அதிதிகளாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரி கவிஞர் முகம்மது தம்பி நௌபல்;.சட்டத்தரணி கவிஞர் ஏ.எல்.றிபாஸ்,சட்டத்தரணி எம்.எம்.முகம்மது முபீன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.நூலின் முதன்மைப் பிரதிகளை ஆசிரியர் ஏ.எச்.அப்துல் சமட், கிராஅபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகர்ரப்,டொக்டர்களான ஏ.ஸம்ஸமீர்,ரீ.எம்.நியாஸ் ஆகியோரும் பெறவுள்ளனர்.
வரவேற்புரை அப்துல் ஆபித்,நூல் அறிமுகம் கவிஞர் டணீஸ்கரன்,நூல் பற்றிய கருத்துரைகளை பேராசிரியர் சே.யோகராசா,ஆய்வாளர் ஏ.பியெம்.இத்ரீஸ், ஆய்வாளர் சிறாஜ் மஷ்ஹ_ர்,கவிஞர் ஜிப்றி ஹாஸன் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.ஏற்புரை நூலாசிரியர் கவிஞர் ஜமீல்,நிகழ்ச்சித் தொகுப்பு ரீ.தினேஸ்குமார்.மருதமுனை பாணு மோட்டர் நிறுவனத்தின் அனுசரணையில் மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.