மக்களின் மனங்களினால் மறக்க முடியாத மரச்சின்னத்தின் மகிமை..!

ரத்தின் மகிமையை அன்று நாங்கள் உணர்ந்ததால்தான் எமது கட்சிக்கான சின்னமாகவும் அதனை பெறுவதற்கு மிகவும் நீண்ட வாத பிரதிவாதங்களின் பின்பு தேர்தல் ஆணையாளரிடமிருந்து, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இச் சின்னத்தை நாங்கள் பெற்றுக்கொண்டோம். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம். ஏ. கபூர் ஆகிய (நான்)கள் இருவரும் இணைந்து வழக்கறிஞர்களாகவும் வாதாடிய பின்புதான் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் இக்கட்சியையும் பதிவு செய்தோம். இதற்கான மரச்சின்னத்தையும் நாங்களே தெரிவும் செய்தோம், என்றால் அதனை யாரும் இன்று மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாத யதார்தமானதும் நிதர்சனமான உண்மையாகும்.

இவைகளை இன்றுள்ள மிக முக்கியமான முன்வரிசை உயர் உறுப்பினர்கள் உட்பட எவரும் எப்போதாவது உணர்ந்திருப்பார்களா..? தெரிந்திருப்பார்களா..? அல்லது அறிந்துதான் இருப்பார்களா..? என்பதை நான் அறியேன். அன்று நாம் இன்றைய முஸ்லிம் அரசியல் வாதிகளின் அறிமுகத்திற்கான முதல் அடயாளச் சின்னமாக பெற்றுக் கொண்ட இம் மரத்தின் நிழலும் அதன் காய் கனிகளும் இன்று நாடு பூராகவுமுள்ள முஸ்லிம் கட்சிக்காரர்களாலும் கனிசமான அளவில் அதன் பயன்களையும் பலன்களையும் பரவலாக பல விதத்திலும் பெற்றுக் கொள்வதற்கு பெரிதும் வாய்பாக இச்சின்னம் அன்று முதல் இன்று வரையும் இருந்து வருகின்றது என்றால் அது மிகையாகாது.

இதற்கு முழுக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் நாங்கள்தான் என்பதையும் எம்மவர்களுக்கு மிகத் தாழ்மையுடன் நாகரீகமாகவும் நாணயமாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -