ஒலுவில் துறைமுக பிரச்சினைக்கு தீர்வுகான அமைச்சர் றிசாத் நடவடிக்கை


ஜெமீல் அகமட்-
டந்த பல வருடமாக ஒலுவில் துறைமுகத்தால் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அந்த மக்களின் வாக்குகளால் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளாமல் ஏமாற்று அரசியல் செய்து வந்துள்ளனர் அதனால் ஒலுவில் துறைமுக பிரதேச மக்கள் கடலறிப்பு தொழில் வாய்ப்பு என்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதனால் அந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்
மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் துரநோக்குடன் உருவான ஒலுவில் துறைமுகத்தை தூரவிடாமல் அபிவிருத்தி செய்ய வேண்டிய கடமைப்பாடு அஸ்ரப் அவர்களின் பெயரை வைத்து அரசியல் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களது கடமையாக இருக்கும் போது அவர்கள் அரசியல் வியாபாரத்துக்காக ஒலுவில் மக்களை ஏமாற்றி துறைமுகத்தை தூர விட்டு விட்டனர்
இந்நிலையில் தனது கட்சிக்கு கிடைத்த துறைமுக கப்பல்துறை பிரதி அமைச்சு பதவியை பயன்படுத்தி ஒலுவில் துறைமுகத்தால் அப்பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை அந்த மக்களிடம் கேட்டறிந்து கொள்ளுமுகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கப்பல் துறைமுக பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்றுப் அவர்களின் தலைமையில் இன்று ( 17 ) ஒலுவில் துறைமுக விடுதி மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
நடைபெற்ற கூட்டத்தில் ஒலுவில் ஜும்மாபள்ளி வாசல் நிர்வாக சபையினர் மற்றும் மீனவர்கள் அவர்களோடு புத்திஜிவிகள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் டாக்டர் ஜெமீல் , தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை தலைவர் சிறாஜ் மீராசாகீபு ஹனீபா மதனி ,நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹீர் , முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரனி அன்சீல் , கல்முனை கலீலுர் றஹ்மான் , கல்முனை மாநகர உறுப்பினர் மூபீத் , நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் றியாஸ் , நிந்தவூர் பிரதேச உறுப்பினர்கள் ஜின்னா மாஸ்டர் ,அஸ்ஹர் ஆகியோருடன் இறக்காம உதவி தவிசாளர் நௌபர் மௌலவி ,கட்சியின் அம்பாறை மாவட்ட இனைப்பாளர் ஜுனைதீன் மாங்குட்டி , கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷ்ரப் மற்றும் இவர்களுடன் கட்சியின் அம்பாறை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டு ஒலுவில் துறைமுகத்தின் அபிவிருத்தி அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி என்ற பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன அதன்பின் எதிர் வரும் 31 ம் திகதி மீண்டும் கூடி இறுதி தீர்மானம் அமைச்சர் றிசாத் அவர்களின் ஆலோசனையுடன் தீர்மானிக்க ஏகமனதுடன் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
இதுபோன்ற கூட்டங்கள் பல கடந்த காலங்களில் நடைபெற்றாலும் அமைச்சர் றிசாத் அவர்களின் முயற்சியால் நடைபெற்ற இன்றைய கூட்டம் ஒலுவில் பிரதேச மக்களுக்கும் மீனவர்களுக்கு விடிவை தரும் என கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதேச மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -