ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் தேசிய அமைப்பின் அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டம...!!

அமைப்பின் ஊடக பிரிவு-
ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் தேசிய அமைப்பின் அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டம் அமைப்பின் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முஹம்மட் தலைமையில் அட்டப்பளம் புழு சேன்ட் பீச் றிசோட்டில் நிந்தவூர்யில் ஞாயிற்றுக்கிழமை(17 ) மதிய உனவுடன் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அமைப்பின் எதிர்கால செயற் திட்டங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் பிரதேச ரீதியாக கல்வி மேம்பாட்டுத்திட்டங்கள் ,சமூக சேவைகள் , சிரமதானம் ,போதை ஒழிப்பு , வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் , வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்குதல் , இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் அத்துடன் அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி மாபெரும் கல்வி , தொழில்வழிகாட்டல் கண்காட்சியொன்றினை ஒழுங்கு செய்தல் போன்றவையும் அங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அமைப்பின் பல்வேறு செயற்படுகள் பற்றி பேசப்பட்டது.
இந்நிகழ்வில் அமைப்பின் பொதுச் செயலாளர் சப்ராஸ் நஸீர் , அமைப்பின் தேசிய அமைப்பாளர் முஹம்மட் ஸஹான்,அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பீ.எம்.றியாத்,அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர்களான இஸ்மாயில் இக்தார் , இம்தியாஸ் மதனி,பிரதேச அமைப்பாளர்களான ஜே.எம்.சாஜித் அலி ( கல்முனை ) , ஏ.எம்ஆர்.முஜாட் ( சாய்ந்தமருது ) , எஸ்.எம்.சிராஜுதீன் ( சம்மாந்துறை) , எம்.அர்சலான் ( அட்டாளைச்சேனை ) , ஏ.ஜீ.எம்.அர்சாத் ( காரைதீவு ) , ஏ.எம்.தானிஸ் ( அக்கரைப்பற்று ) , எஸ்.றுஸானந்தன் ( நாவிதன்வெளி ) , ஏ.நிலூஜன் ( பிரதி அமைப்பாளர் , கல்முனை தமிழ்ப்பிரிவு ) , செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பிரதேச பிரதி அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -